பாஜக பட்டியல் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பாஜக  பட்டியல் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
X

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பாஜகவினர்.

வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சென்னை அகரம் சந்திப்பு வீனஸ் காந்திசிலை அருகே டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாஜக பட்டியல்அணி மாவட்ட பொது செயலாளர் தீபாசதீஷ் ஏற்பாட்டில் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ம.கபிலன் தலைமையில் நடைபெற்றது.

பட்டியல்அணி மாநில துணை தலைவர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். முன்னதாக பட்டியல்அணி மாவட்ட தலைவர் பாஸ்கர், பட்டியல் அணி மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில செயலாளர்கள் சதீஷ்குமார், சுமதிவெங்கடேசன், சிறுபான்மைபிரிவு தேசிய பொதுசெயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு டாக்டர் அம்பேத்கர் திருஉருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு புத்தாடை, அரிசி, தையல் இயந்திரம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பிரசாத், பட்டியல் அணி மாநில செயலாளர் நாகராஜ், மாநில இளைஞரணி துணைத்தலைவர் அஜித்குமார், மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட பொது செயலாளர்கள் இளங்கோ, சரவணன், இளமதி, மாவட்ட அலுவலக செயலாளர் சந்தோஷ்குமார் கட்சி செயல்வீரர் சதீஷ், மற்றும் பாதாம்சந்த், கிருஸ்டோபர், முருகன், எல்லப்பன், தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முடிவில் மாவட்ட பொது செயலாளர் முத்தையாசிவா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதியில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு