திருவள்ளூர், பாடியநல்லூர் ஊராட்சியில் சிலம்பாட்டப் போட்டி : உடற்கல்வி ஆய்வாளர் பங்கேற்பு

திருவள்ளூர், பாடியநல்லூர் ஊராட்சியில் சிலம்பாட்டப் போட்டி : உடற்கல்வி ஆய்வாளர் பங்கேற்பு
X

பரிசு வழங்கும் சிறப்பு விருந்தினர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில் 4-வது சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது.

செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஊராட்சியில் 4-வது சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது.

மாதவரம் தொகுதி, சோழவரம் ஒன்றியம், பாடியநல்லூர் ஊராட்சியில் உள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் டேவிட் மேனியல்ராஜ் தற்காப்புக்கலை பயிற்சி மையம் சார்பில் 4-வது சிலம்பாட்டம் போட்டி டாக்டர் டேவிட் மேனியல்ராஜ் தற்காப்புக்கலை பயிற்சி மையத்தின் நிறுவனர் மாஸ்டர் பார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது.

பயிற்சி மையத்தின் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இப்போட்டியில் சிலம்பம் பயிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக அதிகாரி பால்செபஸ்டிபன், திருவள்ளூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், சோழவரம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கருணாகரன், திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்டம் கழக செயலாளர் ஹரிதாஸ், மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர். இதில் சிலம்ப மாஸ்டர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் கோபிநாத் அனைவருக்கும் நன்றி கூறினார்.

சிலம்பாட்டம் நமது பாரம்பரிய கலை என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிலம்பாட்டம் கற்றுக்கொடுப்பது பரவலாக இருந்துவருகிறது.

Tags

Next Story