ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

பைல்படம்.

திருவள்ளூரிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த 12 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூரிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியை குடிமை பொருள் தடுப்பு குற்றப்பிரிவு போலீசார் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடத்தில் சட்டவிரோதமாக கடத்தி வந்த 12 டன் ரேஷன் அரிசி லாரி மூலம் ஆந்திராவிற்கு கடத்த இருப்பதாக தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின்பேரில் இதனைடுத்து சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீசார் அவ்வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் செங்குன்றம் பகுதியைச் சார்ந்த ராமச்சந்திரன் என்பதும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாக தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ராமச்சந்திரனை வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!