பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு..!

பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு..!
X

புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேலாண்மை குழு நிர்வாகிகள் படம்.

செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்.

செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி செங்குன்றம் அரசு கேபிசி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்தல் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் அமுதா தலைமையில் நடைபெற்றது.


செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசிகுமார் முன்னிலையில் மஞ்சு தலைவராகவும், சாந்தி துணைத்தலைவராகவும் மற்றும் 22 பேர் உறுப்பினர்கள் அதேபோல் கவுன்சிலர்கள் இளங்கோவன், கோதண்டராமன் மற்றும் கல்வியாளராக சீனிவாசன் ஆகியோரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பின்னர் புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு பள்ளி சகஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதுடன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு பாலமாக இருந்து செயல்படுவார்கள். குறிப்பாக மாணவிகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு, அவர்களுக்கான தேவைகள் குறித்த கருத்துக்களை நிர்வாகத்துக்கு எடுத்துச் செல்வார்கள்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா