கடன் தொல்லையால் அரிசி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை..!

கடன் தொல்லையால் அரிசி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை..!
X

பைல் படம்

செங்குன்றம் அருகே அரிசி வியாபாரி கடன் தொல்லையால் 2 மாதத்திற்கு முன்பு அரிசி ஆலையில் தூக்கிட்டு தற்கொலை. எலும்பு கூடாக சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு.

செங்குன்றம் அருகே கடன் தொல்லையால் அரிசி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை எலும்பு குண்டாக சடலம் மீட்பு. சம்பவம் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் விநாயகபுரம், வீர ராகவேல் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் வேல்முருகன் (வயது 54). இவர் செங்குன்றம் அருகே வடகரை பகுதியில் அரிசி ஆலையை நடத்தி வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி மனைவி கவிதா, இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் வேல்முருகன் கடந்த 2018 ஆம் ஆண்டு அரிசி தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதின் காரணத்தினால்.பலரிடம் சுமார் 80 லட்சம் வரை கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வேல் முருகனுக்கு கடன் கொடுத்தவர்கள கடன் திருப்பி தர வேண்டும் என கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.பணத்தை திருப்பித் தர முடியாத நிலையில் இருந்து வந்த வேல்முருகன் கடன் கொடுத்தவர்களிடம் சென்று தனக்கு சற்று கால அவகாசம் வேண்டும் என்று வெளியூரில் பணத்தை கேட்டிருப்பதாகவும் அதனை பெற்று தாங்களுக்கு தருவதாக சொல்லிவிட்டு தனது காரில் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி சென்றவர் இரண்டு மாத காலம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

குடும்பத்தினர் பலமுறை போன் செய்தும் எடுக்காத காரணத்தினால் சந்தேகமடைந்த வேல்முருகன் மனைவி கவிதா தனது கணவர் காணவில்லை என புழல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே வேல்முருகனுக்கு குத்தகைக்கு ஆலையை கொடுத்த உரிமையாளர் கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டதாகவும், ஆலையை காலி செய்யுமாறு வேல்முருகனின் குடும்பத்தாரிடம் கூறிவிட்டு சென்றும் அவர்களிடமிருந்து எந்த ஒரு பதில் வராததை அடுத்து ஆலையின் உரிமையாளர் ஆலைக்கு சென்று ஷட்டரின் கதவை உடைத்துப் பார்த்தபோது அங்கு தூக்கில் தொங்கியபடி எலும்பு கூண்டாக இருக்கும் வேல்முருகனின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடை௯ந்தார்.

அவர் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் இருந்த வேல்முருகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விசாரணை நடத்தியதில் கடன் தொல்லை காரணமாக வேல்முருகன் தனது காரை ஆலையில் வைத்து 2 மாதத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!