சோழவரம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நிவாரணம்

சோழவரம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நிவாரணம்
X

சோழவரம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார்.

சோழவரம் ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகளில் கணமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரக்காடு, தேவனேரி, பூதூர் ஆகிய பகுதிகளில் சுமார் 500.க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த மழை மற்றும் புயல் காரணமாக வாழ்வாதாரம் இழந்து வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து வெளியேற முடியாமல் மிகவும் இன்னலுக்கு ஆளாகினர். இவர்களுக்கு உதவிடும் வகையில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு. நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோழவரம் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் த்தலைவர் கர்ணாகரன், ஊராட்சிமன்ற தலைவர் நீலா சுரேஷ் ஆகியோரின் முன்னிலையில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பங்கேற்று மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு அரிசி, காய்கனிகள் மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!