செங்குன்றத்தில் 21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

செங்குன்றத்தில் 21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
X

கோப்புப்படம்

செங்குன்றம் பகுதியில் லாரியின் மூலம் ஆந்திராவிற்கு கடத்த இருந்த 21 டன் ரேஷன் அரிசி பறிமுதல். உரிமையாளர் மற்றும் லாரி டிரைவர் கைது

ரேஷன் அரிசி கடத்தல் என்பது தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலம் அரிசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அரிசின் தரம் மோசமாக உள்ளதாகப் புகார்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது. இதனை பயன்படுத்தி அரிசி கடத்தல்காரர்கள், ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்குக் கடத்தி, அங்கு அவை பாலிஷ் செய்யப்பட்டு, பிரபல கம்பெனி அரிசிகள் போலவும் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் செங்குன்றம் பகுதியில் லாரியின் மூலம் ஆந்திராவிற்கு கடத்த இருந்த 21 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து இது தொடர்பாக உரிமையாளர் மற்றும் லாரி டிரைவரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பலவாயல் பகுதியில் ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்துவதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்துறையினர் செங்குன்றத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது செங்குன்றம் பாலவாயல் தனியார் கிடங்கில் நின்றிருந்த லாரி ஒன்றை காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்ததில், அதில் சுமார் 21 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியுடன் அரிசியை பறிமுதல் செய்து இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் தங்கப்பாண்டி(44), லாரி டிரைவர் விக்னேஷ்(23) ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை செய்ததில் லாரியின் மூலம் அரிசியை ஆந்திராவிற்கு கடத்த இருந்ததாக தெரியவந்தது.

ஏழை மக்கள் பசியை போக்குவதற்காக தற்போது தமிழக அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து நெல் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி தரமான அரிசியாக மாற்றி அனைத்து ரேஷன் கடைகளில் குடும்ப அட்டதாரர்களுக்கு வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி ஏழை மக்களிடம் கடத்தல் காரர்கள் குறைந்த விலைக்கு வாங்கி அவை அண்டை மாநிலங்களுக்கு கடத்தி சென்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். எனவே இதுபோன்று அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!