மக்களைத் தேடி மருத்துவ முகாம் : அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு..!
மக்களைத்தேடி மருத்துவ முகாம்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 7000 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு மேலும் 3500 வீடுகள் கட்டப்பட உள்ளன. அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் இலங்கை தமிழர்கள் 200பேருக்கு பாஸ்போர்ட் பெற்று தரப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியம், காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மக்களை தேடி மருத்துவ முகாமை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் பேசுகையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது போல, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள உங்களது தேவைகள் அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேளுங்கள்.
அவர் கொடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இலங்கை தமிழர்கள் 200 பேருக்கு பாஸ்போர்ட் பெற்று தரப்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்தள்ளதாக தெரிவித்தார். மேலும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களின் கோரிக்கைகளை அறிய குழுக்களை அமைத்து 3 வகையிலான பிரிவுகளாக கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்தாண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது 174 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசி, பால் பவுடர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 3 கப்பல்களில் அனுப்பி வைத்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தமிழ்நாடு முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மருத்துவ முகாம் திட்டம் செயல்படும் என்றார்.
ஏற்கனவே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 7000 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு மேலும் 3500 வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் மிக்ஜாம் புயல் நிவாரண உதவியாக 6000 ரூபாய் வழங்கிட வேண்டும் என இலங்கை தமிழர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஏற்கனவே மாதந்தோறும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து நிதிநிலைமைக்கு ஏற்ப திட்டம் குறித்து அறவிக்கப்படும் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu