திருவள்ளூர் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

திருவள்ளூர் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
X

திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைகுழு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட்ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி, பொருலாளர் வழக்கறிஞர் டில்லிபாபு ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை துவக்கி வைத்தனர்.

பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட்ரவி, உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் பெற்றோர்களுடன் இணைந்து பள்ளி மேலாண்மை குழு ஆற்ற வேண்டிய பணிகள், மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பள்ளியின் வளர்ச்சி, மாணவிகளின் அறிவு சார்ந்த வளர்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகளாக பெற்றோர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர். இதில் வேதியியல் ஆசிரியர் கிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.முடிவில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் பள்ளியின் வளச்சிக்கான உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!