மாதவரம் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ சுதர்சனம் தொடங்கிவைத்தார்

மாதவரம் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ சுதர்சனம் தொடங்கிவைத்தார்
X

மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி கோணிமேட்டில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ சுகதர்சனம் தொடங்கிவைத்தார்.

மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி கோணிமேட்டில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ சுதர்சனம் தொடங்கி வைத்தார்.

சென்னை : மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி கோணிமேட்டில் அமைந்துள்ள குட்வேர்டு தனியார் பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அரசு, தனியார், பள்ளிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. இந்த முகாமில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார்.

இதில் மாவட்ட கவுன்சிலர் மோரை மு. சதிஷ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, வட்டார மருத்துவ அலுவலர் லாவண்யா,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!