சர்வதேச யோகா தினம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி முகாம்
யோகா வகுப்பில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்.
Yoga Day Celebration - திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருப்தி யோகா பயிற்சி மையம் மற்றும் ஹரிஹர வித்யாலயா பள்ளி சார்பில் இலவச யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் யோகா தலைமை பயிற்சியாளர் ஸ்ரீநித்யா மற்றும் ஹரிஹர வித்யாலயா பள்ளியின் யோகா பயிற்சி மாணவர்கள் தலைமை தாங்கி அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் மகளிர் குழு பெண்களுக்கு இலவசமாக மூச்சுப்பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் முத்திரைகள் போன்றவற்றை அடிப்படை பயிற்சி அளித்தனர். பின்னர் யோகா பயிற்சி செய்வது மற்றும் யோகாவின் நன்மைகள் குறித்து விழிப்புணவு ஏற்படுத்தினர். இதில் பள்ளி மாணவர்கள், மகளிர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu