அரபுமொழி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா..!

அரபுமொழி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா..!
X

அரபுமொழி பயின்று பட்டம் பெறும் மாணவர்கள்.

செங்குன்றம் ஆயிஷா பள்ளிவாசலில் அரபு மொழி பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

செங்குன்றம் ஆயிஷா பள்ளிவாசலில் அரபுமொழி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றத்தில் ஆயிஷா ஹிஃப்லு மத்ரஸாவின் முதலாவது பட்டமளிப்பு விழா மற்றும் ஆயிஷா மகளிர் அரபுக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி ஆயிஷா மஸ்ஜித் தலைமை இமாம் காஜா மொய்னுதீன் ஜமாலி தலைமையில் செங்குன்றம் ஆயிஷா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் ஆயிஷா மஸ்ஜித் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், சுற்றுவட்டார மஸ்ஜித்களின் நிர்வாக பெருமக்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மலப்புரம் ஈஸ்ட் பைனான்ஸ் செகரட்டரி ஷிகாபுத்தீன் அஹ்தல் ஹாஷிமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரபு மொழியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களையும் பரிசு பொருட்களையும் வழங்கி கௌரவித்தார். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி முடித்து பட்டம் பெற்றுச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை ஃகைருள் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரி முதல்வர் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் அன்வர் பாதுஷா உலவி, அடையார் அரபுக் கல்லூரியின் முதல்வர் சதீதுத்தீன் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்டோருக்கு ஆயிஷா மஸ்ஜித் சார்பில் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் ஆயிஷா மஸ்ஜித் துணை இமாம் அபுல் ஹஸன் பிலாலி நன்றியுரை ஆற்றினார்.

Tags

Next Story