ஆத்தூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகம்..!
வருமுன் காப்போம் திட்ட முகாம்.
மாதவரம் அருகே ஆத்தூர் ஊராட்சியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சோழவரம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும் சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான மீ. வே. கர்ணாகரன் தலைமையில் நடைபெற்றது.
ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சற்குணம், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜி.ஆர். பத்மநாபன், ஆத்தூர் ஊராட்சி கழக திமுக செயலாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் தீபா நாகராஜ், சுகவேணி முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ். எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்புப் பெட்டகமும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார்.
இதில் பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர் ஜெயதீபா, சோழவரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அ.காசிம் முகம்மது, துணைச் செயலாளர் கி.வீரம்மாள், மாவட்ட பிரதிநிதி பொன்.கோதண்டன் உள்ளிட்ட மருத்துவத் துறை, அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இம்முகாமில் நோய்களை கண்டறிந்து அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள், மகப்பேறுக்குத் தேவையான ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள், நீரிழிவு நோய், இரத்த அழுத்த பரிசோதனை, மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிதல், இருதய நோய்கள், இ.சி.ஜி, சளி, சிறுநீர், தொண்டை நோய் சிகிச்சை, கண் குறைபாடுகள் மற்றும் தோல் வியாதிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் பரிந்துரையின் பேரில் விலையில்லா பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu