காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கு, முதல்வர் ஸ்டாலின் விடுவிப்பு

காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கு, முதல்வர் ஸ்டாலின் விடுவிப்பு
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீதான காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கு திரும்பப்பெறப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 2018 ஏப்ரல் 4 தேதி போராடியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏழு தலைவர்களை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags

Next Story
AI மூலம் புகைப்படங்களில் அதிரடியான மாற்றங்கள் செய்யும் Editing AI Tools!