வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணம் திருட்டு
X

பைல் படம்.

மாதவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் மற்றுமு் ஒரு லட்சம் பணம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாதவரம் அடுத்த கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், அபிராமி அவென்யூவைச் சேர்ந்த ஜெயசந்திரன், 64, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்.

இவர் , வீட்டை பூட்டி விட்டு, தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் ஆன்மீக யாத்திரைக்கு சென்றார். மறுநாள் காலை, பக்கத்து வீட்டில் வசிக்கும் வசந்தி வீட்டின் பூட்டை உடைக்க பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து மொபைல் போன் மூலம், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்தார்.

ஜெயசந்திரன், கும்பகோணத்தில் இருந்ததால், அவரால் உடனடியாக வீடு திரும்ப முடியவில்லை. பின்னர் கேளம்பாக்கத்தில் வசிக்கும் தனது மகளான சர்மிளாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அவர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, 30 சவரன் நகைகள், ஒரு லட்சம் பணம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதியில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு