பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்..!
திருவள்ளூர் வடகரை அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வடகரை அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட்ரவி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி, பொருளாளர் வழக்கறிஞர் டில்லிபாபு ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை துவக்கி வைத்தனர்.
பின்னர் பெற்றோர்களுடன் இணைந்து பள்ளி மேலாண்மை குழு ஆற்ற வேண்டிய பணிகள், மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பள்ளியின் வளர்ச்சி, மாணவிகளின் அறிவு சார்ந்த வளர்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர் முடிவில் வேதியியல் ஆசிரியர் கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
2009 ம் ஆண்டு இந்தியா முழுவதும் கல்வி உரிமைச் சட்டத்தை அரசு கொண்டு வந்தது. இதில் ஒரு அம்சம் தான் பள்ளி மேலாண்மைக் குழுவாகும். பள்ளி மேலாண்மைக் குழுவென்பது, அரசு பள்ளிகளை மேம்படுத்த, தமிழக பள்ளிக்கல்வித்துறை மீண்டும் மறு கட்டமைக்க முடிவு செய்து, இதற்கான நடை முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu