அரசு பள்ளியில் ஆண்டு விழா..!
அரசு பள்ளியில் நடந்த ஆண்டுவிழா நிகழ்ச்சிகள்
செங்குன்றம் அடுத்த வடகரை ஊராட்சி அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகரை ஊராட்சியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நடுநிலைப்பள்ளியில் தமிழ்முக்கூடல், சாரண-சாரணியர் மற்றும் பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணன்குட்டி தலைமையில் நடைபெற்றது.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பூவராகவன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் போதைப்பொருள் விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, தேசபற்று உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் நடனம் மூலமாக செய்து காண்பித்து காண்போரை வியக்கவைத்தனர்.
அதேபோல் பள்ளியின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு பாரம்பரியம் மிக்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை மாநில கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறை தலைவர் சீனிவாசன், காவல் உதவி ஆணையர் ராஜாராபர்ட், புழல் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணிதிருமால், வடகரை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஜானகிராமன், புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்விரமேஷ், செங்குன்றம் சரக காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்துக்கொண்டு விளையாட்டு போட்டி மற்றும் கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்துரையாற்றினர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி ரேகா, வெப்பம்பட்டு அரசு மாதரி பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வளவன் உள்ளிட்ட சக ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு ஆண்டு விழாவை சிறப்பித்தனர். முடிவில் முதுகலை கணித ஆசிரியர் லாசர்ஸ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu