திருநங்கை உட்பட பலரிடம் பணம் பறித்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது..!

திருநங்கை உட்பட பலரிடம் பணம் பறித்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது..!
X

கைது செய்யப்பட்டதற்கான மாதிரி படம் 

கோயம்பேட்டில் திருநங்கை உட்பட 4 பேரை கத்தியால் தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 6.கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர

சென்னை கோயம்பேட்டில் திருநங்கை வெவ்வேறு பகுதியில்4 பேரை கத்தியால் தாக்கி பணம், செல்போன்கள் பறித்து வழிப்பறியில் ஈடுபட்ட 6.பேருக்கு கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜனனி(என்ற) அஜித்( வயது 27), திருநங்கையான இவர் நேற்று இரவு கோயம்பேடு பகுதியில் நடந்து சென்ற போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிலையில் பணம் கொடுக்காததால் அவரது கையில் கத்தியால் வெட்டி விட்டு பணத்தை பறித்து சென்றனர்.

இதே போல் அந்த வழியாக சென்ற ஆட்டோவை மடக்கி ஆட்டோவின் கண்ணாடியை உடைத்த மர்ம கும்பல் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த காவலாளி ஒருவரையும் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர்.தொடர்ந்து நான்கு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் வெட்டியும் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் குறித்து தொடர்ந்து கோயம்பேடு போலீசாருக்கு புகார் வந்தது.


இந்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தொடர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மதுரவாயல் அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்த விக்கி(என்ற)மாடா (வயது 25), ஆகாஷ்(என்ற)கருவாடு (வயது 25), மணிகண்டன் (வயது 21), சூர்யா(என்ற)தளபதி( வயது 21), தமிழரசன்( வயது 21),கிசோர்( வயது 21), உள்ளிட்ட 6 கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

இதில் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய போது ஆகாஷ்க்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் விக்கி சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதும் பல்வேறு இடங்களில் மாமூல் கேட்டு தகராறு செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து ஆறு பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து இவர்கள் வேறு எந்த சம்பவத்தில் எல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
Will AI Replace Web Developers