டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறப்பு... 'குடி'மகன்கள் எதை செய்யக்கூடாது தெரியுமா?

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறப்பு...  குடிமகன்கள்  எதை செய்யக்கூடாது தெரியுமா?
X
தமிழகத்தில் இன்று காலை 10 மணி முதல், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இன்று அமலுக்கு வரும் நிலையில், 27, மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி தந்துள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறையாக தான் மதுபானங்களை விற்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது. மதுபானம் வாங்க வரும் நபர்கள் நின்று வரிசையில் வருவதற்காக, ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் இடையில் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.

மேலும் ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கட்டாயம் 6 அடி சமூக இடைவெளி இருக்க வேண்டும். மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கும்போதும், மூடும்போதும் உட்புறமும் வெளிப்புறமும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு கொண்ட முகக்கவசம்,கையுறை ஆகியவற்றினை பயன்படுத்த வேண்டும்.

குறைந்த பட்சம் இரண்டு பணியாளர்கள் மதுபான சில்லறை விற்பனைக் கடையின் வெளிப்புறம் நின்று மதுபானம் வாங்க வரும் நபர்கள் சமூக இடைவெளியுடன் வருவதற்கான நடவடிக்கை செய்ய வேண்டும். மேலும் மதுபானம் வாங்க வரும் நபர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai marketing future