இவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் -சென்னை ஆணையர் பிரகாஷ் அதிரடி

இவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் -சென்னை ஆணையர் பிரகாஷ் அதிரடி
X

நாளிதழ் மற்றும் பால் விநியோகம் செய்யும் நபர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாளிகையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாவட்டஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நாளை மே 6ஆம் தேதி வரக்கூடிய புதிய கட்டுப்பாடுகள் குறித்து இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காசிமேடு மற்றும் கோயம்பேடு வளாகங்களை தீவிரமாக கண்காணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளிதழ் மற்றும் பால் விநியோகம் செய்யும் நபர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
the future of ai in healthcare