சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த கூடாது: தமிழக டிஜிபி உத்தரவு!

சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த கூடாது: தமிழக டிஜிபி உத்தரவு!
X
சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக டி.ஜி.பி. திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் அலுவல் ரீதியான பயணத்தின் போது காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

இவர்களில் பெண் காவல் அதிகாரிகள் இனி வரும் நாட்களில் முதல்வரின் பயணங்களின் போது சாலையோரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்.

அவர்களை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் சாலையோரத்தில் நிற்க வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கூடாது " என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!