இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏகாம்பரநாதர் கோவில் நிலம், பள்ளி: அமைச்சர் சேகர்பாபு அசத்தல்

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏகாம்பரநாதர் கோவில் நிலம், பள்ளி: அமைச்சர் சேகர்பாபு அசத்தல்
X

அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிலம் மற்றும் பள்ளிக்கூடம் வந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்ட் உள்ளது. இதில் 44.5 கிரவுண்டில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த 2010ம் ஆண்டு 12.5 கிரவுண்ட் இடம் கோயில் வசம் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டது.

99 ஆண்டு குத்தகைகாலம் முடிந்த பிறகு இணை ஆணையர் நீதிமன்றத்திற்கு சென்றதால் கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. அந்த இடத்தில் இயங்கி வந்த பள்ளியை தங்களால் தொடர்ந்து நடத்த இயலாது என கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிறுவனத்தினர் தெரிவித்து கடந்த 13ம் தேதி 32 கிரவுண்ட் இடத்தை அறநிலையத்துறை வசம் மீண்டும் ஒப்படைத்தனர்.

அந்த பள்ளி பயிலும் 700 மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதனை அறநிலையத்துறை ஏற்று நடத்த முடிவு செய்தது.பெற்றோர்கள் முன்னிலையில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் நேரில் வந்து உறுதியளித்தனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?