சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்!

சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்!
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

சென்னை திருமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை திருமங்கலம் தங்கம் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக அண்ணாநகர் துணை ஆணையர் ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் தலைமையில் தங்கம் காலனியில் உள்ள அந்த வீட்டிற்கு சென்று காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது 80 அட்டைப் பெட்டிகளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உயர் ரக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மதுபாட்டில்களையும், வீட்டில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்து, திருமங்கலம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக காவல் துறையினர் வரும் தகவல் அறிந்து வீட்டில் உள்ள கணவன், மனைவி இருவரும் தப்பித்து ஓடிவிட்டனர். இருவரையும் போலீசார் விசாரித்து வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!