அம்பத்தூரில் விசாரணை கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற நபர் கைது

அம்பத்தூரில் விசாரணை கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற  நபர் கைது
X
போலீஸ் வேனை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அம்பத்தூர் ஐடிஐ அருகே கஞ்சா பொட்டலங்களை கொடுக்க முயன்றார்

அம்பத்தூரில் விசாரணை கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய வந்த நபரை போலீஸார் கைது அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், சென்னை மத்திய புழல் சிறையில் இருந்து பல குற்ற வழக்குகளுக்காக கைதான சுமார் 15.க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஓட்டுநர் ஆனந்த பாபு(19)வை ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் காவல் பேருந்தில் அழைத்து வந்துள்ளார்

அப்பொழுது காவல் வாகனத்தை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அம்பத்தூர் தொழில் பயிற்ச்சி கல்லூரி அருகே வந்து கஞ்சா பொட்டலங்களை கொடுக்க முயன்றுள்ளார். இதனை முகப்பு கண்ணாடியில் கண்ட ஓட்டுநர் ஆனந்த பாபு காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.காவலர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் உடனடியாக அந்த நபரை கைது செய்த ஆயுதப்படை காவலர்கள் விசாரணைக் கைதிகள் அழைத்துவரப்பட்ட வாகனத்திலேயே ஏற்றி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் மர்ம நபர் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பதும்,நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வந்த குற்றவாளிக்கு கஞ்சா கொடுக்க வந்தும் தெரியவந்தது. அவரிடமிருந்து 4 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!