13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் போக்சோவில் கைதுசெய்து சிறையிடைப்பு

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் போக்சோவில்  கைதுசெய்து சிறையிடைப்பு
X
செங்குன்றம் அருகே வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 5 பேர் கொண்ட கும்பல் கைதுசெய்து சிறையிலடைப்பு

செங்குன்றம் அருகே வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுநர் இவருக்கு தன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து 13 வயதில் மகள் 15 வயது மகனும் உள்ளார் இவர்கள் இருவரையும் பாட்டியுடன் வசித்து வசித்து வருகின்றனர் . 7ம் வகுப்பு படித்து வரும் சிறுமி, வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: குடிப்பழக்கம் கொண்ட எனது தந்தை அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை என்றும். உங்களது தாயும் கருத்துவேறுபாடு காரணத்தினால் என்னுடைய தந்தையை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும் . இதனால் எனது சகோதரர்தான் வேலைப்பர்த்து என்னை படிக்க வைத்து வருகிறார்.

இந்த நிலையில் நான் தனியாக இருந்த நேரத்தில் பார்த்து போதையில் வீட்டுக்கு வந்த 5 பேர் எனது அண்ணனை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் அவன் திருத்தணியில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சென்று விட்டான். இதனால் நான் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட 5 பேரும் கடந்த மாதம் 8-ந்தேதி நள்ளிரவு 2 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி 5 பேரும் பாலியல் உன் கொடுமை செய்ததாக . அப்போது அவர்கள் என்னிடம் மிகவும் தகாத முறையில் நடந்து கொண்டனர்.

இதன் பிறகு கடந்த 2 மாதங்களாக போதை கும்பலைச் சேர்ந்த 5 பேரும் அடிக்கடி வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து தாங்க முடியாத அளவுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். 5 பேரும் என்னை கட்டிலில் தள்ளி விட்டு பாலியல் ரீதியாக சித்ரவதை செய்கின்றனர்.

நாங்கள் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டி வருகிறது.எனவே என்னைபாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொண்டிருக்கும் 5 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அந்த சிறுமி புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த பாலியல் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவடி போலீஸ் கமி‌ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 5 பேர் கொண்ட 21 வயதான கௌதம் ,லட்சுமணன், அப்துல், அக்பர், பாபு ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!