வேலை வழிகாட்டி: இந்திய கடற்படையில் SSC Officer பணிகளுக்கு தகுதியானர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலை வழிகாட்டி:  இந்திய கடற்படையில் SSC Officer பணிகளுக்கு தகுதியானர்கள் விண்ணப்பிக்கலாம்
X
பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

இந்திய கடற்படையில் காலியாக உள்ள SSC Officer பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்கள் :

நிறுவனம் : இந்திய கடற்படை

பணியின் பெயர் : Short Service Commission Officer ( SSC Officer )

காலி பணியிடங்கள் : 45

வயது வரம்பு : 2.1.1997 க்கும் 1.7.2002 க்கும் இடை பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

CSC/IT பாடப் பிரிவில் முதல் வகுப்பு BE/B.Tech பட்டம் அல்லது Computer Science / IT பாடப் பிரிவில் M.Sc/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

MCA பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகுதியுடன் NCC கல்வித் தகுதியுடன் சான்றிதழ் வைத்திருப்பது விரும்பத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நடைபெறும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :

பெங்களூர், போபால், கொல்கத்தா, விசாகப்பட்டினம்.

நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவிலுள்ள இந்திய கடற்படை கல்லூரியில் 4 வார அடிப்படை கடற் பயிற்சி வழங்கப்படும். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய கடற் படையில் 2 வருட கடற்படை அதிகாரிக்கான பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் இந்திய கடற்படையில் சப்-லெப்டினன்ட் ஆக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 16.7.2021 க்கு முன் விண்ணப்பிக்கவும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!