சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் குழந்தைகள் தின விழா | Erode News Today

Erode News Today
X

Erode News Today

Erode News Today - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைக்கிராமத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைக்கிராமத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது | Erode News Today

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் பரண் அமைப்பு பழங்குடி மக்களின் சமூக, கல்வி, மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக, மாலை நேர அறிவாற்றலகத்தை சேர்ந்த பழங்குடி ஊராளி மாணவ, மாணவியர்களுக்கு பகுதியளவில் பல திறமை சார் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, குழந்தைகள் தின விழா பரண் மையத்தில் பரண் இயக்குனர்கள் உதயபிரகாஷ், கென்னடி, தலைமையில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் தனுஷ் டெக்ஸ்டைல்,உரிமையாளர் ஹரி ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பரிசளித்து பாராட்டி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் குத்தியாலத்தூர், கூத்தம்பாளையம், குன்றி, திங்களூர், சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் பஞ்சயாத்துகளில் இருக்கும் அறிவாற்றலக மாணவ மாணவிகள் மற்றும் அறிவாற்றலக இருபால் ஆசிரியர்கள், மற்றும் பழங்குடி ஊராளி மக்கள் சங்க செயலாளர் மசணி உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Erode News Today - இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்சிகள் நடத்தன. காலநிலை மாற்றத்தினால் வரப்போகின்ற அபாயத்தை நாடகமாகவும், போதைக் கலாச்சாரத்தினால் ஏற்படும் ஆபத்துகளையும் நாடகமாகவும், நடனமாகவும் அரங்கேற்றினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரண் மைய செயல் பாட்டாளர்கள் கோகுல், மதேஷ், மதன், ரெங்கசாமி, சகாயமேரி, லீமா, மகேஸ்வரி மறஙதீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது