சத்தியமங்கலத்தில் திப்பு சுல்தானுக்கு மணிமண்டபம்: சிறுபான்மை நலக்குழு தீர்மானம் | Erode news today

Erode news today
X

Erode news today

Erode news today - சத்தியமங்கலத்தில் திப்புசுல்தானுக்கு மணிமண்டபம் தமிழக அரசு கட்டித்தர வேண்டுமென சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில் நடந்த விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சத்தியமங்கலத்தில் திப்புசுல்தானுக்கு மணிமண்டபம் தமிழக அரசு கட்டித்தர வேண்டுமென சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில் நடந்த விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Erode news today

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா கருத்தரங்கு தனியார் மண்டபத்தில் மாநில உதவி தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் மாநில ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு திப்பு சுல்தான் ஆற்றிய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

விழாவில், திப்பு சுல்தானுக்கு சத்தியமங்கலத்தில் மணி மண்டபம் தமிழக அரசு கட்டித்தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வினாடி வினா போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில், சிறுபான்மை நலக்குழு நிர்வாகிகள், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக டீம் அகாடமி செயலாளர் ஹாத்திம்தாய் வரவேற்று பேசினார். சிறுபான்மை மக்கள் நலக்குழு ராம்தாஸ் நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!