இந்தியன் தாத்தா எப்படி உருவானார்?

இந்தியன் தாத்தா எப்படி உருவானார்?
X

இந்தியன் 2 படத்தில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல்ஹாசன். ( கோப்பு படங்கள்)

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் தாத்தா எப்படி உருவானார் என்று தெரிந்துக்கொள்வோம்.

இந்தியன் 2 படம் வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. இன்னும் ஒரு நாள் தான் உள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் ஆரம்பத்தில் அனிருத்தை விமர்சனம் செய்தவர்கள் இப்போது அவர் போட்ட தாத்தா வர்றாரு பாடலைக் கொண்டாடி ட்ரெண்ட் செட்டாகவே மாற்றி விட்டார்கள். அப்படித்தான் ஒவ்வொரு பாடலும் ஹிட்டாகிக் கொண்டு போகிறது.

இந்தியன் 2 படத்துக்கு இத்தனை கோடி செலவா? பட்ஜெட் எகிறிடுச்சே!

இந்த நிலையில் கடைசியாக நடந்த பிரஸ் மீட்ல கமலை ஷங்கர் செல்லமாகக் கோபித்துக் கொண்டாராம். நீங்க எங்க போனாலும் இந்தியன் 3 ஐப் பத்தியேப் பேசுறீங்கன்னு சொல்றாரு. அது ஒண்ணும் நான் திட்டம் போட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்ல. இந்தியன் 2 ரொம்ப நல்லாருக்கு. அதை எடுக்கும்போதே இந்தியன் 3 ஐயும் எடுத்தாச்சு. அதனால அதையும் பத்திப் பேசுனேன் என்றார் கமல். இந்தியன் 2 படத்தில் இத்தனை வில்லன்களா?

கமல் சாரின் அப்பா, அவரோட 2 சகோதரர்கள் என அவங்க 3 பேரோட போட்டோவைக் கொண்டு போய் தோட்டாதரணி கிட்ட கொடுத்துட்டேன். இதுல இருந்து ஒரு உருவத்தை உருவாக்குங்கன்னு சொன்னேன். அவரு உருவாக்குனது தான் இந்தியன் தாத்தா என்கிறார் இயக்குனர் ஷங்கர். இந்தியன் 2 ஹீரோயின் இவங்க இல்லையா? அப்ப யாரு?

அவர் தான் இந்தியன் 2வில் அதகளப்படுத்தப் போகிறார். சேனாபதி உபயோகப்படுத்துன பேனா, கத்தி, பெல்ட் என எல்லாவற்றையும் அப்படியே உபயோகப்படுத்தினோம். ஒரு பேனா சட்டையில் சரியாக இல்லை என்றாலும் அதே மாதிரியான பழங்காலத்துப் பேனாவைக் கமல் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தாராம். கேரக்டருக்கு அவ்வளவு மெனக்கிடுபவர் கமல் என்றார் ஷங்கர். ஒரு நிமிடத்துக்கு 10 கோடி! கமல்ஹாசனின் சொத்து மதிப்பு தெரிஞ்சா வாயடைச்சு போவீங்க..!

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!