இந்தியன் 2 ஹீரோயின் இவங்க இல்லையா? அப்ப யாரு?

இந்தியன் 2 ஹீரோயின் இவங்க இல்லையா? அப்ப யாரு?
X
இயக்குனர் ஷங்கரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இப்படத்தின் நாயகியாக ஆரம்பத்தில் பல்வேறு நடிகைகள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவின.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படமான "இந்தியன் 2" பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தில் 3 நாயகிகள் இருக்கிறார்கள். அவர்களது தனித்திறமை குறித்தும் அவர்கள் நடித்த திரைப்படங்கள் குறித்தும் காண்போம்.

இயக்குனர் ஷங்கரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இப்படத்தின் நாயகியாக ஆரம்பத்தில் பல்வேறு நடிகைகள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவின. பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

கமல்ஹாசனின் அவதாரம்

28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் "இந்தியன் தாத்தா" அவதாரம் எடுத்திருக்கும் கமல்ஹாசன், தனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் "இந்தியன் 2" படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் - நடிப்பின் உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைவதால், இப்படத்தின் வெற்றி மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

நாயகிகள் யார்?

"இந்தியன் 2" படத்தின் நாயகி தேர்வு பட்டியலில் முதலில், கீர்த்தி சுரேஷ், தமன்னா, ராஷ்மிகா மந்தனா போன்ற முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், அவர்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் திரிஷா இந்த படத்தில் நடிப்பதாக மிகவும் உறுதியான தகவல்கள் வெளியாகின. கடைசியில் அதுவும் உண்மையில்லாமல் போய்விட்டது.

பிரியா பவானி ஷங்கர்

இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ஜெகன் குழுவில் இருக்கும் ஒரே பெண் பிரியா பவானி ஷங்கர். இவர்கள்தான் இந்தியன் தாத்தா திரும்ப வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். தங்களுக்கு நடந்த அநியாயங்களைக் கண்டு வெகுண்டு எழுந்து அதிலும் தோல்வியடைந்து நொந்து போயி இருக்கும்போது இந்தியன் தாத்தா குறித்து இவர்களுக்கு தெரியவருகிறது. அதன் பிறகுதான் இவர்கள் இந்தியன் தாத்தாவை வரவழைக்கிறார்கள்.

ரகுல் ப்ரீத் சிங்

படப்பிடிப்பு தொடங்குவதற்கு சற்று முன்பு, ரகுல் ப்ரீத் சிங் "இந்தியன் 2" படத்தின் நாயகிகளில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் ஜோடியாக வருவது போல புரோமோக்களில் காட்டப்படுகிறது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்திய சினிமாவின் லெஜண்ட் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தார்.

ரகுல் ப்ரீத் இயல்பிலேயே கமல்ஹாசன் ரசிகையாம். அவர் சிறு வயதிலிருந்தே கமல்ஹாசன் நடித்துள்ள படங்களை மிகவும் அதிக அளவில் பார்த்து ரசித்தார் என்று பேட்டிகளில் குறிப்பிடுகிறார்.

காஜல் அகர்வாலின் பங்கு:

பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் தவிர, இந்த படத்தில் முக்கிய நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஒரே படமாக இருக்கும்போது காஜல் அகர்வால் படத்தின் நாயகியாக புரமோட் செய்யப்பட்டார். "இந்தியன் 2" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், படத்தின் கதைக்களம் மாற்றப்பட்டு, காஜல் அகர்வால் படத்தில் இல்லையென்றும் தகவல்கள் வெளியாகின. இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பல பேட்டிகளுக்கு பிறகு இது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது.

காதல் காட்சிகள்

படம் குறித்த பல வதந்திகள் பரவினாலும், "இந்தியன் 2" படத்தில் காதல் காட்சிகளில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். பாடலும் இருப்பதால் அவரே இந்த படத்தின் நாயகியாக பரவலாக பேசப்படுகிறார். மேலும் இவரே படத்தின் புரமோசன்களில் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார்.

சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் இடையேயான காதல் காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்கான காதல் பாடலாக நீலோற்பம் எனும் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

2 நாட்களே பாக்கி

ஜூலை 12ம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தினைக் காண லட்சக்கணக்கானவர்கள் காத்திருக்கின்றனர். படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மட்டுமின்றி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். தமிழில் இந்தியன் 2 எனவும், தெலுங்கில் பாரதியூடு 2 எனவும், ஹிந்தியில் ஹிந்துஸ்தானி எனவும் வெளியாகிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!