ஒரு நிமிடத்துக்கு 10 கோடி! கமல்ஹாசனும் சொத்து மதிப்பு தெரிஞ்சா வாயடைச்சு போவீங்க..!
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது கல்கி 2898 ஏடி திரைப்படம். இந்த படத்தின் நாயகனாக பிரபாஸ், நாயகியாக திஷா இருந்தாலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கமல்ஹாசன் இந்த படத்தின் தலையாய கதாபாத்திரமான சுப்ரிம் யாஷ்கின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை எதிர்கொள்ள 6000 ஆண்டுகள் உயிர் வாழும் சாகா வரம் பெற்ற அஸ்வதாமனாக அமிதாப் பச்சன் வருகிறார். இவர்களுக்கு இடையில் கடவுளை தன் வயிற்றில் சுமந்து பூமிக்கு வெளிச்சத்தைத் தர இருக்கும் அம்மாவாக தீபிகா நடித்திருக்கிறார். இவர்கள் தவிர படத்தில் பல்வேறு நடிகர், நடிகைகள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் ஆஹா ஓஹோ என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே வரும் கமல்ஹாசன் இந்த படத்துக்காக 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால் 1 நிமிடத்துக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என ரசிகர்கள் கணக்கிட்டு சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ( Kamal Haasan Net Worth 2024 ) எவ்வளவு, உலகம் முழுக்க அவருக்கு இருக்கும் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என்னென்ன என பலரும் தேடி வருகின்றனர். அதன் அடிப்படையில் இந்த பதிவும் அதுகுறித்தே பேசுகிறது
இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் யார் என்கிற கேள்வி பலரது மனதையும் போட்டு ஆட்டிக்கொண்டே இருக்கும். நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் நாயகர்கள்தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர் என பேசி வருவார்கள்.
ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆசியாவிலேயே ரஜினிகாந்த் தான் இரண்டாவது அதிக சம்பளம் பெறுகிறார் என்று கூறிவந்தனர். 2.0 சமயத்தில் ஜாக்கிசானுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினி இருப்பதாக தகவல் வெளியானது. பின் ஷாருக்கான் ரசிகர்கள் அவர்களது நாயகரான SRK தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்று கூறிவந்தனர்.
பாகுபலி படத்தில் பிரபாஸ் நடித்தபிறகு அவரது ரசிகர்களும் இதேபோல பிரபாஸ்தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்று பேசி வந்தனர். கேஜிஎப் படத்தில் யாஷுக்கும் அதே புகழ் கிடைத்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் ஒப்பந்தமானபோது அந்த பட்டியலில் முதலிடத்தை விஜய் பிடித்தார் என்று பேச்சு எழுந்தது.
ஆனால் உண்மையில் இந்த பட்டியலில் கமல்ஹாசன்தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். அது சம்பளம் என்று கணக்கிடாமல் ஒரு படத்துக்கு அவருக்கு கிடைத்த லாபம் என்று வைத்துக் கொண்டு கணக்கிட்டால் அவருக்கு விக்ரம் படத்தில் கிடைத்த லாபம் உலகிலேயே ஹாலிவுட் தவிர்த்த நாடுகளில் அதிக வருமானம் பெற்ற ஒரு நடிகர் எனும் பாராட்டை பெறச் செய்தது.
இந்நிலையில் தற்போது கல்கி படத்துக்காக அவர் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். தற்காலத்தில் அஜித், விஜய், ரஜினி, கமல் என பல நடிகர்கள் 100 கோடி சம்பளம் வாங்குவது சாதாரணமாகிவிட்டது. இது தவிர தெலுங்கு நடிகர்களும் அதிக அளவில் சம்பளம் பெறுகின்றனர்.
ஷாருக்கானின் வருமானம் மொத்தமாக கடந்த வருடத்தில் 500 கோடி ரூபாயாக இருக்கிறது. ஜெயிலர் படத்தின் மூலம் அந்த பட நிறுவனத்துக்கு 250 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. கல்கி படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு 10 நிமிடங்களுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின்படி 2 பாகங்களுக்கும் சேர்த்து 150 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக தகவல்.
கமல்ஹாசனின் சொத்துமதிப்பு 2024 | Kamal Haasan Net Worth 2024
கமல்ஹாசனின் தொழில் - சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சி, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம், விளம்பரங்கள்
அசையா சொத்துக்கள் - ரூ. 131 கோடி. இதில் ரூ.17.79 கோடி மதிப்பில் 35.59 ஏக்கர் விவசாய நிலம்.
ஆடம்பரமான 2 வீடுகள் - ரூ.19.5 கோடி (இந்தியாவில்), லண்டனில் 2.5கோடி ரூபாய்
கார் - லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 கார் ( விலை ரூ. 2.82கோடி), பிஎம்டபுள்யூ 730 எல்டி கார் ( ரூ.1.3 கோடி)
இவைப் போக அவரது வீட்டில் பல லட்ச விலை மதிப்புள்ள வீட்டு உபயோக உபகரணங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் பல்வேறு இணையதளங்களில் பரவி வரும் தகவல்தானே தவிர அதிகாரப்பூர்வ வெளியீடு இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu