ஸ்வீடனிலிருந்து வந்த 10 வயது சிறுமிக்கு பாசிடீவ் -ஒமிக்ரானா? டெல்ட்டா வைரஸ்சா? ஆய்வு

ஸ்வீடனிலிருந்து வந்த 10 வயது சிறுமிக்கு பாசிடீவ் -ஒமிக்ரானா? டெல்ட்டா வைரஸ்சா? ஆய்வு
X
ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேரில் 10 வயது சிறுமிக்கு பாசிடீவ் ஆனதால், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சோ்த்தனர்.

சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஸ்வீடன் நாட்டிலிருந்து தோகா வழியாக வந்த ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேரில் 10 வயது சிறுமிக்கு பாசிடீவ் ஆனதால்,கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சோ்த்தனர். ஒமிக்ரானா? டெல்ட்டா வைரஸ்சா? என்று ஆய்வு.

ஸ்வீடன் நாட்டிலிருந்து தோகா வழியாக கத்தாா் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்த 10 வயது சிறுமிக்கு நடந்த RT PCR பரிசோதனையில் பாசிடீவ் என்று வந்ததால் சிறுமி உடனடியாக சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். அதோடு சிறுமிக்கு ஏற்பட்டுள்ளது டெல்ட்டா வைரஸ்சா அல்லது ஒமிக்ரான் வைரஸ் தொற்றா? என்பதை கண்டறிய,மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்படுகிறது. சிறுமியுடன் வந்த தந்தை,தாய், 6 வயது குழந்தை ஆகியோரையும் தனிப்படுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த 10 வயது சிறுமியின் குடும்பத்தினா் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தை சோ்ந்தவா்கள். பணியின் காரணமாக ஸ்வீடன் நாட்டில் வசிக்கின்றனா். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்