YSRCP எம்பிக்கள் ஜெகனுக்கு மிரட்டல்?
YSRCP எம்பிக்கள் கட்சி தாவப்போவதாக ஜெகனுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
அரசியல் வட்டாரங்களில் தற்போது நிலவி வரும் யூகங்கள் உண்மையாக மாறினால், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 எம்.பி.க்களில் (லோக்சபா மற்றும் ராஜ்யசபா) 10 பேர் வரும் நாட்களில் பாரதிய ஜனதா கட்சியில் சேர வாய்ப்புள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி, சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் முன்னெப்போதும் இல்லாத வகையில் தோற்கடிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
175 எம்.எல்.ஏ.க்களில் 11 எம்.எல்.ஏக்களுடன் மட்டுமே அவமானத்தை எதிர்கொண்டாலும், 25 எம்.பி. சீட்களில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. நான்கு சீட்களை மட்டுமே பெற்றது. பொதுவாக, தோல்வியடைந்த கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தங்கள் அரசியல் அடையாளங்களை உயிருடன் வைத்திருக்கவும், தங்கள் வணிக நலன்களைப் பாதுகாக்கவும், ஆளும் கட்சிக்குத் தாவுவதற்கான வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள். இது வழக்கமான ஒரு நடைமுறை தான்.
கடந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் நாயுடு அரசு பெரும் பின்னடைவைச் சந்தித்தவுடன், தெலுங்கு தேசம் கட்சியின் ஆறு ராஜ்யசபா எம்.பி.க்களில் 4 பேர் உடனடியாக பாஜகவில் இணைந்தனர். தற்போது ஒய்எஸ்ஆர்சிபி சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. மேலும், பாஜகவுடன் தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்தது தெலுங்குதேசம். எனவே, ஒய்.எஸ்.ஆர்.சி.பி.க்கு மாநில அளவிலும் மத்தியிலும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதனால், அவர்களது எம்.பி.க்கள் மிதுன் ரெட்டி மற்றும் அவினாஷ் ரெட்டி ஆகியோர் பாஜகவில் தாவ உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து மேலும் 10 பேர் வரை பா.ஜ.க.,வில் சேர தயாராகி வருகின்றனர். விரைவில் இது நடக்க வாய்ப்புகள் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.