'உலக செவிலியர் தினம்' சேலத்தில் சமூக இடைவெளியுடன் கொண்டாட்டம்
'உலக செவிலியர் தினம்' சேலத்தில் சமூக இடைவெளியுடன் செவிலியர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
சேலத்தில் உலக செவிலியர் தினத்தையொட்டி செவிலியர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர் ...
உலக அளவில் அனைத்து நாடுகளிலும் 1974 ஆம் ஆண்டு முதல் மேப் 12ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நான் அர்ப்பணிப்புடன் வேலை செய்வேன், எப்போதும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கும் உதவியாக இருப்பேன், மக்கள் நலனுக்காக பாடுபடுவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திரளான அரசு மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.