தீவிரவாதத்தை கை விட்ட திரிபுரா மாநில இயக்கங்கள்..!

இந்திய தேசத்தின் வடகிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-09-06 05:50 GMT

]அமித்ஷாவுடன் கை  குலுக்கி தேசியத்துடன் இணைந்த திரிபுரா அமைப்பினர்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கிளர்ச்சிக்குழுக்கள் பிரிவினையை கைவிட்டு இருப்பது  இந்தியாவிற்கான  நிம்மதி மேலும் அதிகரிக்கின்றது. இது பற்றி பார்க்கலாம். திரிபுராவில் பிரிவினைவாதம் பேசி பெரும் தொல்லைகளை நீண்டகாலமாக செய்து வந்த இயக்கங்கள், பெரும் அழிவினை கொடுத்து கொண்டிருந்த இயக்கங்கள் இரண்டு துப்பாக்கியினை கீழே வைத்து விட்டு வெள்ளைக் கொடி காட்டி அமைதிப் பாதைக்கு திரும்பி விட்டது.

திரிபுராவில் தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிப்படை ஆகிய கிளர்ச்சி குழுக்கள் அமித்ஷா முன்னிலையில் ஆயுத வழியினை கைவிட்டு தேசியத்தில் இணைந்து கொண்டன.

நாட்டில் காஷ்மீர் போலவே பெரும் ஆபத்தை எதிர்கொண்ட இடம் வடகிழக்கு மாநிலங்கள். அங்கு ஏழு மாகாணங்களிலும் 70 தீவிரவாத இயக்கங்கள் இருந்தன. இவற்றின் பின்னால் சீனா, பர்மா ஊடாக இருந்தது. சில தீவிரவாத இயக்கங்கள் வங்கதேச இயக்கம் மூலமாக இருந்தது.

இந்த இயக்கங்கள் இந்திய அரசுக்கு தீராத தொல்லை கொடுத்தன. இதனால் வடகிழக்கு மாகாணங்கள் என்னாகுமோ எனும் அச்சம் எல்லா தேசாபிமானிகளுக்கும் இருந்தது. ஆனால் அந்த இயக்கங்கள் உருவாக காரணமும் இருந்தது. குறைந்த மக்கள் தொகை கொண்ட மலைவாழ் பிரதேச பகுதியில் தொழில் வளம் இல்லாமல் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிய அளவில் வளர்ச்சி கிடைக்கவில்லை. அங்கு பல பிரச்னைகள் இருந்ததால் இதற்கு முன் ஆண்ட காங்கிரஸ் இந்த மாநிலங்களை கண்டுகொள்ளவில்லை.

உள்கட்டமைப்பில்லை. தொழில்கள் இல்லை. இந்த வறுமையினை பயன்படுத்திய மாற்றுக் கும்பலும், தேசவிரோத சக்திகளும் பயன்படுத்திக் கொண்டன. இதனால் எங்கும் அழிவே மிஞ்சியது. பாஜக அங்கே மெல்ல மெல்ல காலூன்றிய பின் நிலைமை மாறியது. அசாம், நாகலாந்து, மேகலாயா என எல்லா இடமும் பாஜக வளர வளர மக்கள் மனம் மாறினர். இப்போது மிகப்பெரிய வகையில் வளர்ச்சி திட்டங்கள் அங்கு நடக்கின்றன. இதனால் மக்கள் வருவாய் அதிகரித்து, அங்கு ஆயுதங்களை கைவிடுகின்றார்கள்.

அசாம், நாகலாந்து, மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே தீவிரவாதத்தை கைவிட்டு விட்டன. இப்போது திரிபுராவும் சேர்ந்து கொண்டது. மணிப்பூர் மட்டும் தீவிரவாதத்தை கை விடும் கடைசி கட்ட நடவடிகையில் இருக்கின்றது அதுவும் விரைவில் சரியாகும்

ஆக அருணாச்சல பிரதேசம், அசாம், நாகலாந்து, மேகாலயா, மிசோரம், திரிபுரா எங்கும் பிரிவினைவாதம் ஒடுக்கப்பட்டு அம்மக்களும் மாகாணமும் தேசியத்துக்கு வருகின்றார்கள் என்பது மாபெரும் மகிழ்ச்சி

நிச்சயம் இதை செய்தது ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் பாஜகவும் என்பதில் சந்தேகமே இல்லை, அவர்களால் தான் இன்று வடகிழக்கு மாகாணங்கள் தேசத்துடன் இணைந்து இருக்கின்றது. இந்தியாவிற்கு காஷ்மீரும் கிடைத்திருக்கின்றது.

தேசியத்தில் கலந்து விட்ட அந்த திரிபுரா சகோதரர்களை அமித்ஷாவோடு சேர்ந்து நாமும் வரவேற்று கட்டி தழுவிக் கொள்வோம்.

"வெள்ளை நிறத்தொரு பூனை

எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றதப் பூனை

அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,

கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி

பாம்பின் நிறமொரு குட்டி

வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்

அவை யாவும் ஓரே தரம் அன்றோ

இந்த நிறம் சிறிதென்றும்

இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ 

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்

அதில் இந்தியர் வேற்றுமை இல்லை

எண்ணங்கள் செய்கைகள் யாவும்

இங்கு யாவர்க்குமோர் தேசமென காணீர்"

என்ற் மகாகவி பாரதியாரின் வரிகளோடு அவர்களை வரவேற்போம்.

Tags:    

Similar News