நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளே, மாவட்ட நிர்வாகம் சொல்வதை கேளுங்க!

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அம்ரித் கேட்டுக்கொண்டு உள்ளார்;

Update: 2022-03-01 13:15 GMT

கலெக்டர் அம்ரித்

நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட கல்லாறு, கக்கநல்லா, நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, தாளூர், கெத்தை, நம்பியார்குன்னு ஆகிய சோதனைச் சாவடிகளில்,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்டத்திற்குள் எடுத்து வர தடை செய்யப்பட்டு உள்ளது.

இதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து சோதனை சாவடியிலும் முன்னாள் ராணுவத்தினர், தன்னார்வலர்களை கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனைச்சாவடிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு வாகன சோதனையின் போது தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை நீலகிரிக்குள் எடுத்து வருவது கண்டறியப்பட்டால்,  பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு வாகனச்சோதனையில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் மற்றும் நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அம்ரித் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Tags:    

Similar News