குற்றாலத்தில் விமரிசையாக நடந்த ஐப்பசி விஷூ தேரோட்ட விழா!

பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திரை சபையில் குற்றால விஷூ திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2024-10-12 15:36 GMT

குற்றாலத்தில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

குற்றாலத்தில் ஐப்பசி விசு திருவிழாவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பஞ்ச சபைகளில் இரண்டாவது சபையாக உள்ள சித்திர சபை குற்றாலம் குற்றாலநாதர் குழல் வாய் மொழி அம்பாள் கோவிலில் அமைந்துள்ளது.

இந்த கோவில் முன்னொரு காலத்தில் வைணவத் தலமாக இருந்தது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அகத்தியரை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் மாறுவேடம் அணிந்து மூலவரான பெருமாள் சிலையை சிவலிங்கமாக மாற்றியதாக கோவில் தல வரலாறு கூறுகிறது.

அருவி கரையின் அருகே இருப்பதால் சுவாமி ஜலதோஷம் பிடிக்கமால் இருக்க தைலம் காய்ச்சி படைப்பது வழக்கம். இதுபோன்று பல்வேறு சிறப்பம்சம் கொண்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஐப்பசி விசு திருவிழா கடந்த செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. விநாயகர், முருகன், சுவாமி,அம்பாள் என நான்கு தேர்கள் சித்திர சபையில் அமைந்துள்ள ரத வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். இந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வருகின்ற திங்கட்கிழமை நடராஜமூர்த்திக்கு தாண்ட தீபாராதனையும், செவ்வாய்க்கிழமை சித்திர சபையில் நடராஜமூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம் செய்திருந்தனர்.

Similar News