ஒரு பக்கம் கடல்;மறுபக்கம் நதி; மக்களை ஈர்க்கும் மரவந்தே கடற்கரை..!

ஒரு பக்கம் நதியையும், மறுபக்கம் அரபிக்கடலையும் கொண்ட மரவந்தே கடற்கரை, இயற்கையை ரசிப்போருக்கு ஏற்ற இடம்.;

Update: 2023-11-24 05:34 GMT

maravanthe beach-மறவந்தே கடற்கரை (கோப்பு படம்)

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம், பைந்துாரில் ஒரு புறம் அரபிக்கடலையும், ஒரு புறம் சவுபர்ணிகா நதியையும் கொண்டது மரவந்தே கடற்கரை. நெடுஞ்சாலையில் இருபுறம் கடலும், நதியை கொண்ட இந்த பகுதியை, கர்நாடகா மட்டுமின்றி, இந்தியாவில் இதுபோன்று வேறு எங்கும் பார்க்க முடியாது.

மரவந்தேயில் இருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள அழகிய கடற்கரையுடன் கூடிய பைந்துார், பாறைகள் நிறைந்த ஒட்டினனே, பெலகா தீர்த்த நீர்வீழ்ச்சி ஆகியவை மறவந்தே கடற்கரையை சுற்றிலும் உள்ள சில முக்கிய சுற்றுலா அம்சங்கள் ஆகும்.

எப்படிச்  செல்வது? பெங்களூரில் இருந்து 420 கி.மீ., தொலைவிலும், மங்களூரில் இருந்து 105 கி.மீ., தொலைவிலும் உள்ளது. கார்வார் விரைவு ரயில் மூலம், குந்தாபுரா ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ., தொலைவில் மரவந்தே அருகிலுள்ள ரயில் நிலையத்துக்கு செல்லலாம். சாலை வழியாக குந்தாபுரா நகரில் இருந்து மரவந்தே கடற்கரைக்கு டாக்சிகள் கிடைக்கின்றன.

குந்தாபுராவில் இருந்து 23 கி.மீ., தொலைவில் உள்ளது. மரவந்தே கடற்கரைக்கு மிக அருகில் கடற்கரை ஓய்வு விடுதிகள் அல்லது ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. குந்தாபுரா நகரிலும் தங்கலாம். உண்மையில் பல வெளிநாடுகளை விட அதிக அளவு கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றை தேடிப்பார்த்து ரசிக்கலாம் வாங்க.

கர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இயல்பிலேயே கேரளத்தைப் போல மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளும், அருகே கடற்கரைகளும் இருக்கும் இடங்களும் கர்நாடக மாநிலத்திலும் அதிக சுற்றுலா ஈர்ப்புகளைக் கொண்டிருக்கும். அந்த வகையில் மரவந்தே கடற்கரையும் அதிக அளவில் சுற்றுலாவுக்கு பயணிகளை தன்னுள்ளே அழைத்துக்கொண்டு இருக்கிறது.


வெள்ளை மணல்

இந்த வெள்ளை மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. நீங்கள் இங்கு சென்றால் நிச்சயம் இதை தவறவிடக் கூடாது.

ஆபத்தில்லா கடற்கரை

மரவந்தே கடற்கரைக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது மிகச் சிறப்பு. அவர்களுக்கு மிகவும் இந்த கடற்கரை பிடிக்கும். இது தவிர மரவந்தேவின் அமைதியான, ஆபத்தில்லாத கடலில் நீங்கள் நீந்தவும் செய்யலாம்.

எப்போது செல்லலாம்

மரவந்தே கடற்கரைக்கு சுற்றுலா செல்ல ஆகஸ்ட் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்கள் சிறப்பானதாக இருக்கும்.

Tags:    

Similar News