கொடிவேரி அணைக்கு வாங்க..! குறைந்த செலவில் நிறைவான டூர்..!
Kodiveri Tourist Place -குறைந்த செலவில் ஒரு நிறைவான டூர் போகணுமா..அப்ப.. கொடிவேரி அணைக்கு வாங்க..!
Kodiveri Tourist Place -கொடிவேரி அணை ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றின் மீது அமைந்துள்ளது. இந்த அணை கோபிசெட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் நோக்கி 15 கிமீ தொலைவில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
கொடிவேரி அணை காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். குறைந்தபட்ச தொகையான 5 ரூபாய் நுழைவுக் கட்டணம் வாங்கப்படுகிறது. மத்தியான நேரம் பார்வையிட சிறப்பாக இருக்கும். உச்சி வெயிலில் சும்மா.. ஜில்லுன்னு இருக்கும். சில்லுன்னு,தெளிவான நீரில் குளிக்கலாம். மாலி நேரத்தில் சூரியன் மறையும்போது பூங்காவில் அமர்ந்து, வறுத்த மீன்களை உண்டு சுவைக்கலாம். என்னங்க..இப்போவே வாயில் ஜலம் ஊறுதா?
குறைந்த செலவில் நிறைய மகிழ்ச்சி அடையணும்னா அதுக்கு ஒரே இடம் கொடிவேரி அணை தாங்க.
கோயம்புத்தூரிலிருந்து கொடிவேரி அணைக்கு விரைவாக போகணும்னா அதற்கு டாக்சி எடுத்தக்கலாம். டாக்சிக்கு தோராயமாக ரூ.1,700 முதல் 2,000 வரை ஆகலாம். சுமார் 1 மணிநேரத்தில் போய்விடலாம். கோயம்புத்தூரில் இருந்து கொடிவேரி அணைக்கு இடையே உள்ள தூரம் 75 கி.மீ.
பவானி ஆறு, அதைச்சுற்றியுள்ள மலைகள் கண்களுக்கு விருந்தளிக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து மாலைநேரத்தில் வீசும் காற்று இதமான மகிழ்ச்சியைத்தரும். சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள், தூரத்தே தெரியும் தென்னை மரங்கள் சூழ்ந்த கிராமங்களின் அழகு கண்ணைக்கவரும்.
ஒருமுறை கொடிவேரி அணைக்கு வந்து பாருங்க. ஜாலியா இருந்துட்டு போங்க..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2