ஊரில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற இ-பாஸ் வேண்டி விண்ணப்பம்- அதிகாரிகள் வருத்தம்
தமிழக மக்கள் இ-பாஸ் பதிவின் போது முறையான ஆவணங்கள் இன்றி விண்ணப்பம் செய்து வருகின்றனர் என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.;
ஊரில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற இ-பாஸ் வேண்டி விண்ணப்பம்- அதிகாரிகள் வருத்தம்
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில் இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக அளவு மக்கள் சுற்றுலா செல்லும் நோக்கில் இ-பாஸ் பதிவு மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 1 மாத காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் மருத்துவம், இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக வெளி மாவட்டங்கள் செல்ல இ-பதிவு நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 7ம் தேதி தமிழக அரசு சில தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அதில் பாதிப்பு அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களில் குறைந்த தளர்வுகள் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நீலகிரி, குற்றாலம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இ-பதிவு விண்ணப்பங்களில் மருத்துவ, திருமணம் போன்ற நிகழ்வு விண்ணப்பங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட நிலையில் தமிழக மக்கள் இ-பாஸ் பதிவின் போது முறையான ஆவணங்கள் இன்றி விண்ணப்பம் செய்து வருகின்றனர். இதனை பரிசீலிப்பதால் நேரம் வீணாகிறது என்று அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இது குறித்து நீலகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கூறுகையில், நீலகிரி வருவதற்கு தற்போது இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பதிவிடும் மருத்துவ தேவைக்கான இடமும், மருத்துவமனையோ இந்த மாவட்டத்தில் இல்லை. இவ்வாறு இருக்கும்போது அனுமதி கிடைத்தால் சுற்றுலா போகலாம் என்ற அடிப்படையில் முறையான ஆவணம் இன்றி விண்ணப்பிக்கும் முறை அதிகரித்துள்ளது. இதனால் இதுவரைக்கும் 90 சதவிகித விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.