Whatsapp about quotes in tamil-வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் எப்படி வைக்கலாம்?
தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நேரில் வணக்கம் சொல்கிறோமோ இல்லையோ சமூக ஊடகங்களில் பரிமாறிக்கொள்ளும் கருத்துகள் ஏராளம்.;
Whatsapp about quotes in tamil-வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் (கோப்பு படம்)
Whatsapp about quotes in tamil
டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலத்தில் நேரடி தொடர்புகளைவிட செல்போனில் தொடர்புகொள்வது வழக்கமாகிவிட்டது. காலையில் எழுந்ததும் காலை வணக்கம் சொல்வது முதல் இரவு தூங்கப்போவது வரை செல்போனில்தான் எல்லாமே நடக்கிறது.
காலையில் எழுந்ததும் பல் தேய்க்கிறோமோ இல்லையோ செல்லைத் தேய்த்தாகவேண்டும். அதிலும் குறிப்பாக பலர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக ஒரு ஸ்டேட்டஸை உருவாக்குவதற்காக வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது வழக்கமாகிவிட்டது. அது அவர்கள் யார் என்பதை தனித்துக்காட்டும் சொற்றொடர்கள்.
Whatsapp about quotes in tamil
அவ்வாறான கருத்துக்களை தேடிப்பிடித்து அவர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப இருக்கும் சொற்றொடரைக் கண்டுபிடித்து, ஸ்டேட்டஸ் வைப்பது வழக்கமாகிவிட்டது. நமது வாசர்களுக்காக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் தரப்பட்டுள்ளது. நீங்களும் வாசித்து பயன்பெறுங்கள்.
பிடித்தவர்களிடம் அன்பாய்
இருப்பதை விட
உண்மையாய் இருங்க..
அன்பை விட உண்மை
அதிக மகிழ்ச்சியானது..
அதிக ஆழமானது.
எதிர் காலத்தில்
நிம்மதியாக இருப்பேன்
என்று நிகழ்காலத்தை தொலைக்கிறேன்.
புகைப்படம் எடுக்கையில்
மட்டும் புன்னகை என்றாகிவிட்டது
பலரது வாழ்க்கையில்.
Whatsapp about quotes in tamil
நம்மளோட பலம் பலவீனம்
ரெண்டுமே நமக்கு புடுச்சவங்களோட
அன்பு தான்.
கரம் பிடித்தவர்
துணையிருந்தால்
ஆழ்கடலையும்...
அழகாக கடக்கலாம்.
முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்
முயற்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தால்
முழுமையான வெற்றி நிச்சயம்
சிந்தித்து செயலாற்றுங்கள்
அடுத்தவர்களின்
கண்களுக்கு
எப்படியோ
என் விழிகளுக்கு
உலக அழகி
என் அன்னையே.
ஒரு மென்மையான வார்த்தை
ஒரு கனிவான பார்வை
ஒரு அன்பான புன்னகை
ஆகியவற்றால் அதிசயங்களையும்
அற்புதங்களையும் நிகழ்த்திக்
காட்ட முடியும்.
நிழலை
அழித்து
விடாதீர்கள்
நிஜங்கள்
மறையக்கூடும்.
ஒருநாள் நிரந்தரமில்லாமல்.
Whatsapp about quotes in tamil
உள்ளத்தை
எப்போதும் உளியாக வைத்துக்கொள்
சிலையாவதும் சிறையாவதும்
நீ செதுக்கும்
தன்மையை பொறுத்ததது
நிறைவேறா
கற்பனைகள்.
கனவில்
மட்டுமே
சாத்தியம்
போல.
(ஏக்கங்கள்)
தூரம் என்பது
இடங்களுக்கு தான் நம்
இதயத்துக்கு அல்ல.
சில சிறந்த தருணங்களுக்காக
காத்திருக்கும் பொழுதுகளில்
பல சிறந்த வாய்ப்புகள்
நம்மை கடந்து சென்றுவிடும்.
ஒரு முறை
உதவி செய்யதவறினால்
செய்த உதவிகள்
அனைத்தையும் மறந்து
அவர்களை தூக்கியெறிந்து
விடுகிறது சுயநல மனம்.
உதவி செய்ய
வேண்டும்
என மனம் இருந்தால்
மட்டும் போதும்
மற்றவை அவசியமற்றவை
நற்குணங்களாக.
Whatsapp about quotes in tamil
எண்ணங்களும் நோக்கங்களும்
சரியாகவும் உண்மையாகவும்
இருந்து விட்டால்
உறவுகளை
உருவாக்க வேண்டிய
தேவை இல்லை
தானாகவே அமைந்து
விடுகிறது.
கண்டஇடத்திலும்
கொட்டக்கூடாதது
குப்பைகள் மட்டுமல்ல
நம்
வீட்டுப்பிரச்சனைகளையும் தான்
நெருக்கங்கள்
குறையக் குறைய
விவாதங்களும்
பின்னர்
விரோதங்களும்
எழுகின்றன
அனுபவமாக.
நாம் எடுக்கும்
சில பல முடிவுகள்
பிறர்க்கு
நகைச்சுவையாய்
இருந்தாலும்
அதன்
காயத்தை
நாம் மட்டுமே
உணர்ந்திருக்க
முடியும்.
மனநிலை - பொறுத்தே
அழகற்றவர் என்று
யாரையும் ஒதுக்கிவிடாதே
அங்கும் இதயம்
துடித்துக்கொண்டிருக்கும்
(படித்ததில் - பிடித்தது)
Whatsapp about quotes in tamil
நாளை என்பது
வெறும் கனவு
கனவு சில நேரம்
கானல் நீரே
இன்று மட்டுமே நிஜம்
நிஜத்தோடு போராடு
கனவை மறந்து.
பிறர்
நம் மீது
வீசும் ஊசி
போன்ற வார்த்தைகள்
நமக்கு அளிக்கும்
உயர்தர சிகிச்சையாம்
(அக்குபங்சர்)
நேசிக்கும்
நூறு பேரை
நேசிக்க
துவங்கினாலே
வெறுக்கும்
நான்கு பேரை
பற்றி யோசிக்க
நேரமிருக்காது...
உன்னை வழிநடத்த
அறிவை பயன்படுத்து.
Whatsapp about quotes in tamil
மற்றவர்களை வழிநடத்த
இதயத்தை பயன்படுத்து.
வாழ்க்கையை பாரமென்று
நினைத்தால்
நம் சந்தோஷங்களும்
தூரம் தான்
எந்திர
வாழ்க்கையை
வாழ கற்றுக்
கொண்ட நமக்கு
நம்மை பற்றி
யோசிக்க நேரமில்லை.
வசதியாயிருக்கும்போதே
எளிமையாக
வாழ கற்றுக்கொண்டால்
ஏழ்மைநிலைக்கு தள்ளப்பட்டாலும்
மனம் ஏங்காது
வாழ்ந்தவாழ்க்கையை நினைத்து
மகிழ்ச்சியாக
வாழ்க்கை நகரும்
போது மரணபயமும்
எட்டிப்பார்க்கும்...
மரணம்
வந்துவிடக்கூடாதென்று
Whatsapp about quotes in tamil
நல்ல
விதை விதைத்தால்
தான் செடி
நன்றாக வளர்ந்து
நல்ல பலனை
கொடுக்கும்
அது போல
நல்ல எண்ணங்கள்
இருந்தால் தான்
வாழ்க்கை பிரகாசிக்கும்.
உங்கள் தனித்திறமையை
பற்றி அறியாதவர்கள்
ஏதாவது குறை
சொல்லிக்கொண்டு இருந்தால்
அதை நினைத்து
தயவுசெய்து
கவலைப்பட்டுக்கொண்டு
இருக்காதீர்கள்.
அடுத்தவர் முதுகில்
சவாரி செய்யும்
சிலர் அறிவதில்லை
சொந்தகால்களின்
வலிமையை.
பொறாமையில்
யாரையும் வீழ்த்த
நினைத்தால்
நீதான் நிம்மதியிழந்து
தவிப்பாய்
அடுத்து
என்ன நடக்குமென்று
தெரியாமல்
நகர்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையும்
சுவாரஸ்யமானதே
தனிமை
எனக்கு ரொம்ப
புடிக்கும் காரணம்
என் மனதை
காயபடுத்த
அங்கே யாரும்
இருப்பதில்லை
Whatsapp about quotes in tamil
என்றோ
இழந்ததை நினைத்து
இன்று புலம்பாதே
நாளைய
நாள் நல்லநாள்
என்று நினைத்து வாழ்
வாழ்க்கை
ஒரு அனுபவமுங்க
நல்ல அனுபவம்
கிடைச்சா பரவசப்படணும்
மோசமான அனுபவம்
கிடைச்சா பக்குவப்படணும்
அனுபவிங்க வாழ்க்கையை.
உண்மை
ஒரு சில நேரத்தில்
மன வருத்தம் தான்
பேசும் பொய்
எப்போது உடையும்
என நினைக்க நினைக்க
மன அழுத்தம் தான்
அதற்கு உண்மையாகவே
இருந்துவிடலாம்.
பயந்து பயந்து
வாழ்வதைவிட
துணிந்து எதிர்த்திடு
மரணம் ஒருமுறைதான்
உலகத்தின் பார்வையை
நம்மால் மாற்றமுடியாது
நம் பார்வையில் பாதையில்
நாம் தெளிவாயிருப்போம்
நாம தடுக்கி விழுந்தா
தூக்கிவிட இரண்டு கைகளும்
ஏறிமிதிக்க நான்கு கால்களாவது
காத்திருக்கும்.
Whatsapp about quotes in tamil
என்றும் அஞ்சியே
வாழ்ந்தால் இறுதி
அஞ்சலியே நிகழ்த்தப்படும்
துச்சமென்று துணிவுடன்
நடந்தால் வாழ்வு
நம் வசப்படும்
நல்லுள்ளங்களிடம்
உங்கள் மூளையை
ஆன் செய்து வையுங்கள்.
போலி உறவுகளிடம்
உங்கள் எண்ணங்களை
ஆப் செய்து விடுங்கள்.
நாம் ஒன்றை நினைத்து
ஒரு முடிவு எடுத்தால்
அது நமக்கு எதிர்மாறாக
அமைந்து விடுகிறது
சில மனித மனங்களை
போலவே
அறியாமல் செய்த தவறை
மன்னிக்க தெரியாத
மனிதர்களிடம் அறிந்து
செய்த தவறுக்கு
மன்னிப்பை எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்
இறந்தகாலத்தை நினைத்து
வருந்துவதை விட
எதிர்காலத்தை நினைத்து
பயப்படுவதை விட
நிகழ்காலத்தை நினைத்து
சந்தோஷமாக வாழ்ந்து விட்டு
போய்விடு மனிதா
Whatsapp about quotes in tamil
நான் இறைவனிடம்
கேட்பது ஒன்று மட்டுமே
என்னைப் பிடிக்காதவர்களுக்கு
என்னை பாரமாக்கி விடாதே
எனக்கு பிடித்தவர்களை
என்னிடமிருந்து
தூரமாக்கி விடாதே
உலகில் விலை
மதிப்பில்லாத விசயங்கள்
இரண்டு உண்டு
ஒன்று தாய்மையில்
உருவாகி மரணம்
வரை தொடரும்
உண்மையான அன்பு
இன்னோன்று
எதையும் எதிர்பார்க்காமல்
மற்றொருவர் மீது
நாம் வைக்கும் நம்பிக்கை
உரிமை உள்ள இடத்தில்
கோபத்தை காட்டிணாலும்
புரிந்துகொள்வார்கள்
உரிமை இல்லாத இடத்தில்
புன்னகைத்தாலும்
புறக்கணித்து விடுவார்கள்
கானல் நீரை பருகுவதால்
தாகம் தீராது
இன்று விதைதால்
இன்றே மரமாகாது
நதிகளை போல
இயல்பாகஓட கற்றுக்கொள்ளுங்கள்
Whatsapp about quotes in tamil
காலம்
நம்பிக்கைகளின் தொட்டில்
ஆசைகளின் கல்லறை
முட்டாள்களுக்குக் கற்றுத்தரும் குரு
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்
உண்மையான அக்கறையோடு
ஒருவர் கூறும்
அறிவுரைகளை கடைபிடிக்காவிட்டாலும்
பரவாயில்லை
அறிவுரை கூறும்போது
சிரித்து அவமானப்படுத்தாமலாவது
இருக்கலாம்.
வாழ்வில்
இரு போராட்டம்தான்
ஜெயித்தவர் தக்கவைத்துக்கொள்ளவும்
தோற்றவர் ஜெயிக்கவும்
போராடுகிறார்.
பணம் பணம்
என்று ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
மனதை நேசிக்கும்
உறவுகள் கிடைத்தால்
தொலைத்துவிடாதீர்கள்
அவசரமாக
எடுக்கபடும் முடிவுகள்
அதிஷ்டத்தை போன்றது
ஏதோவொரு நேரத்தில்தான்
நன்மையைதரும்
சிந்தித்துசெயல்படுங்கள்
பிடித்த வாழ்க்கையை
அமைத்துக்கொள்கின்றேன்
என்று
கிடைத்த வாழ்க்கையை
தொலைத்துவிடாதீர்கள்
நாளைய
அதிஷ்டத்தை நம்பி
இன்றைய வாய்ப்புகளை
தட்டி கழிப்பவர்
எப்போதும்வெற்றி பெறமாட்டார்கள்
இறந்த பின்நல்லவன்
என்று கூறும் சமூகம்
இருக்கும் போது
கெட்டவன் என்று
புறம் தள்ளும்.
Whatsapp about quotes in tamil
நமக்கு பிடித்தவர்களோ
அல்லது நம் உறவுகளோ
நாம் பேசும் போது
அதனை கேலி செய்தாள்
அவர்களை விட்டு
சற்று விலகியே இருங்கள்
இல்லை என்றால்
சில நேரங்களில்
அது ஒரு வாக்குவாதமாக
முடிந்துவிடுகிறது.
வாழ்க்கையில்
இக்கட்டான சூழ்நிலையில்
தள்ளப்படும்போதுதான்
சிலரரின் சுய ரூபம்
வெளிப்படுகின்றது
உதவி என்று அவர்களிடம்
கையேந்தும்போது.
வாழ்க்கைல
ரொம்ப நேர்மையா இருந்தா
எடிசனுக்கு கெடச்சது
தான் நமக்கும்
வாழ வேண்டும்
என ஆசைப்பட்டு
ஒரு கட்டத்தில்
எப்படியாவது
வாழ்ந்தால் போதும்
என்ற மனநிலையில்
தள்ளிவிடுகிறது வாழ்க்கை
கடந்த காலங்களை
நம்மால் மாற்றவோ
மறக்கவோ
திருத்தியமைக்கவோ முடியாது
நடந்தவைகளை
ஏற்கத்தான் வேண்டும்
ஆனால் எதிர்காலத்தை
மாற்றமுடியும்
இறுதியான முடிவினை
உறுதியாக எடு
எப்போதும்
ஒரே மாதிரி
உண்மையாக
இருப்பவர்களை விட
ஆட்களுக்கும்
சூழ்நிலைகளுக்கும்
ஏற்றார் போல்
மாறுபவர்களையே
இந்த போலி உலகம்
பெருமையாக ஏற்றுக் கொள்கிறது
Whatsapp about quotes in tamil
உயரத்தில் செல்ல
உயரத்தில் உள்ளவர்களை
நோக்கிடு
நாம் இன்னும்
உயர வேண்டும் என்று
உயரத்தில் சென்று
தாழ்வில் உள்வர்களை
நோக்கிடு
நாமும் இங்கிருந்து
தான் உயர்ந்தோம் என்று
தேவை இல்லாதவற்றை
தூக்கி எறிந்தால் தான்
தேவையானவை மட்டும்
தேங்கி நிற்கும்.