டீசல் காருக்கு ஓட்டம் முடிந்தது
CNG கார்கள் டீசல் கார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது;
CNG கார்கள் டீசல் கார்களைவிட அதிகம் விற்பனையாகின்றன
முதல் முறையாக டீசல் கார்களை விட CNG கார்கள் அதிகம் விற்பனையாகியிருக்கின்றன என்ன காரணம்?நீங்கள் ஒரு கார் வாடிக்கையாளராக இருந்து CNG கார்கள் மெயின்ஸ்ட்ரீம் இல்லை என நினைத்தால், உங்களது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. ஆம், இனி பெட்ரோல்/டீசல் கார்கள் என்று சொல்ல முடியாது. பெட்ரோல்/CNG கார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.2025 நிதியாண்டில் (FY25) டீசல் கார்களை விட அதிகம் விற்பனையாகி, இந்திய கார் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன CNG கார்கள்.மார்ச் 31ம் தேதியன்று நிறைவடைந்த 2025 நிதியாண்டில், ஒட்டுமொத்தமாக 7.36 லட்சம் டீசல் கார்கள் விற்பனையாகியிருக்கும் நிலையில், அதனை விட அதிகமாக 7.87 லட்சம் CNG கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது மாறி வரும் பயனாளர்களின் மனநிலையைக் குறிக்கிறது. முன்னர் கூடுதல் தேர்வாகப் பார்க்கப்பட்ட CNG கார்கள் தற்போது டீசல் கார்களை விட அதிகம் விற்பனையாகியிருக்கின்றன.