புதிய ஆப் தயாரித்து ரூ.416 கோடி சம்பாதித்த இளைஞர்..! பட்டம் பெறாத நிபுணர்..!

இந்திய இளைஞர் ஒருவர் புதியதாக ஆப் ஒன்றை தயாரித்து, அதனை ரூ.416 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்.

Update: 2024-10-04 04:50 GMT

கிஷன் பகாரியா 

வாழ்க்கையில் வெற்றி பெற கல்லூரி பட்டம் தேவை இல்லை என்பதை இதற்கு முன்பு பலரும் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அதற்கு உதாரணமாய் சச்சின் டெண்டுல்கரை எடுத்துக் கொள்ளலாம். அந்த வரிசையில் தற்போது கிஷன் பகாரியா என்ற நபரும் இணைந்துள்ளார். காலேஜிற்கு சென்று டிகிரி முடிக்கவில்லை என்றாலும்.. கோடிங்கை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கிஷனின் விடாமுயற்சி அவரை "டெக்ஸ்ட்.காம்" என்ற அப்ளிகேஷனை உருவாக்க வைத்தது.

இந்த அப்ளிகேஷனை வேர்ட் பிரஸ்-இன் தாய் நிறுவனமான ஆட்டோமேட்டிக் 50 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து கையகப்படுத்தியது. அதாவது இது இந்திய ரூபாய் மதிப்புக்கு சுமார் ரூ.416 கோடி.கிஷன் தனது 12 வயது முதல் ஆன்லைன் மூலம் கோடிங் செய்வதை கற்றுக் கொண்டுள்ளார். கோடிங் மீதான அவருடைய இயற்கையான ஆர்வம் இவ்வளவு பெரிய சாதனையை செய்ய வைத்துள்ளது. இதற்கு முன்னரே அவர் விண்டோஸ் அப்ளிகேஷன்களையும் உருவாக்கியுள்ளார்.

கிஷனின் கற்றல் திறன் மற்றும் அப்ளிகேஷன்களை உருவாக்கும் திறன், பின்னர் ஒரு குறிப்பிடத்தக்க தொழில் முனைவோராக மாற வழிவகுத்தது. 2020-ஆம் ஆண்டில், "texts.com" என்ற அப்ளிகேஷனுக்காக தொடர்ந்து தனது பணியை செய்துள்ளார். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற பல்வேறு தளங்களிலிருந்து வரும் அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த அப்ளிகேஷன் தான் இது.

செய்தி அனுப்புபவருக்கு தெரிவிக்காமல் செய்திகளைப் படிக்கும் அம்சமும் இந்த ஆப்பில் சிறந்த அம்சமாக இருந்தது. மேலும், "texts.com"-இன் பயனர்களின் தகவல் தொடர்பு பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் "end-to-end encryption" வழங்கப்பட்டிருந்தது.கிஷன் தான் இந்த அப்ளிகேஷனை செய்து முடித்தவுடன் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது அவர்கள் கூறிய ரிவியூ கிஷனை இன்னும் உற்சாகப்படுத்தியது. விரைவில், தொழில் வல்லுநர்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அப்ளிகேஷனின் புகழ் அதிகரித்தவுடன், இது வேர்ட்பிரஸ்ஸின் தாய் நிறுவனமான ஆட்டோமேட்டிக்கின் கவனத்தை ஈர்த்தது. 3 மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஆட்டோமேட்டிக்கின் இணை நிறுவனர், மேட் முல்லன்வெக் 2023-இல் தனிப்பட்ட முறையில் கிஷனைச் சந்தித்தார்.

மேலும் அக்டோபரில் "texts.com"-ஐப் பெறுவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.இளம் தொழில்முனைவோரின் சிறப்பான திறமை மற்றும் பார்வையை அங்கீகரித்து, கிஷனை "தலைமுறை தொழில் நுட்ப மேதை" என்று முல்லன்வெக் விவரித்தார். அவருடைய மகத்தான வெற்றி இருந்த போதிலும், கிஷான் தொடர்ந்து "text.com"-ஐ மேம்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் ஆதரவின் கீழ் இந்தத் தளத்திற்கு உழைத்து வருகிறார். கிஷன் பகாரியாவின் கதை, கல்லூரிப் பட்டப்படிப்பு என்ற பாரம்பரியப் பாதையில்லா விட்டாலும், ஆர்வமும், சுயக் கற்றலும், புதுமையும் எப்படி வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதற்குச் சான்றாக மாறியுள்ளது.

Tags:    

Similar News