வாட்ஸ் ஆப் தற்போது தனது பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் தொலைத்தொடர்பு செயலியான வாட்ஸ் ஆப் தற்போது தனது பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாட்ஸ் ஆப் பயனர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
நாட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டோ, வீடியோ போன்றவற்றினை பகிர்வதற்கு மக்களுக்கு தக்க உதவியாக இருந்து வருகிறது வாட்ஸ் ஆப். மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் பல பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோல் வாட்ஸ் ஆப் மக்களுக்கு பல வகையில் பயன்பட்டு வருவதால் மக்களின் அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கினை பெற்றுள்ளது.
இந்நிலையில் அவ்வப்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது பயனர்களை கவரும் வகையில் பல வித விரும்பத்தக்க அப்டேட்களை வழங்கி வரும். தற்போது அந்த வகையில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை பயனர்கள் தங்களது வாய்ஸ் மெசேஜினை பிறருக்கு அனுப்பிய பின்பே கேட்க முடிவும். ஆனால் தற்போதைய அப்டேட்டில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பயனர்கள் ஒரு முறை அதனை பிரிவியூ செய்து கேட்டு கொள்ளலாம்.
அது சரியாக இல்லை என்றால் அந்த மெசேஜினை நீக்கி மீண்டும் புதிய வாய்ஸ் மெசேஜினை பதிவு செய்து கொள்ளலாம். மற்றொரு அப்டேட்டாக வாட்ஸ் ஆப்பில் நீண்ட வாய்ஸ் மெசேஜ் ஏதேனும் வந்தால் அதன் வேகத்தை 1x, 1.5x மற்றும் 2x ஆக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவ்வாறு மாற்றப்பட்டாலும் வாய்ஸ் மெசேஜ் தெளிவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களும் ஆண்ட்ராய்டு, ios அடிப்படையிலான சாதனங்கள், வாட்ஸ் ஆப் வெப்/ டெஸ்க்டாப் போன்றவற்றில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.