காற்று மாசுபாட்டை தடுக்கும் திரவ மரம்: உலகிற்கு வரமா?
செர்பியாவில் உள்ள விஞ்ஞானிகள் காற்று மாசுபாட்டிற்கு எதிராக போராட நம்பமுடியாத கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளனர்
இன்று உலக அளவில் சுற்றுச்சூழல் பிரச்னை பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. ஆர்ட்டிக், அண்டார்டிக் பிரதேசங்கள் உருகுகின்றன. இமயமலையில் உள்ள பனிமலைகளும் உருகி வருகின்றன.. வெயிலும், புயலும், பனிப்பொழிவும் மாறி, மாறி உலகை உலுக்கி வருகின்றன. சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீர்வு காண கார்பன் மாசுகட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்காக உலக அளவில் பெரிய அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. காரணம் உலகளவில் நகரங்களில் கார்கள் எண்ணிக்கையும், அதில் இருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவுகளும் கூடுகிறது. ஆக்ஸிஜன் அளவுகள் குறைகிறது. மரங்களை நட இடம் இல்லை. நட்டாலும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும், பாதுகாக்கவேண்டும், அவை வளர ஆண்டுக்கணக்கில் ஆகும்.
ஆமாம்...இதுக்கு என்ன செய்யமுடியும்? இந்த சிக்கலுக்கு தான் பெரிய அளவில் தீர்வு காணப்பட்டுள்ளதாக உலகம் கொண்டாடி வருகிறது. செர்பியாவில் பெல்கிரேடு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் "திரவ மரங்களை" உருவாக்கி நகரெங்கும் அமைத்து வருகிறார்கள்.
பெல்கிரேட் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு "திரவ மரம்" என்ற புதுமையான கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நகர்ப்புற புகைப்பட உயிரியக்கத்தை டாக்டர் இவான் ஸ்பாசோஜெவிக் மற்றும் பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்துறை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அவரது குழுவினர் உருவாக்கியுள்ளனர்
திரவ மரம் என்றால் என்ன?
ஒரு கண்ணாடி தொட்டி, அதனுள் நீரை நிரப்பி நுண் பாசியை (micro algae) விடுகிறார்கள்.அதை பேருந்து நிலையம், கம்பெனிகள், பார்க்கிங் பகுதிகள், கடைகள், கல்லூரிகள் என மரங்களை எங்கே எல்லாம் வைக்கமுடியாதோ அங்கே எல்லாம் வைக்கலாம். அவை மரங்களை போலதான். கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்க மைக்ரோஅல்காவைப் பயன்படுத்துகிறது மற்றும் கார்பன் டை ஆக்சைடை பிணைப்பதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஒளிச்சேர்க்கை மூலம் தூய ஆக்ஸிஜனை உருவாக்குகிறது.
அவை வளர சூரிய வெளிச்சமும், நீரும், கார்பன் டைஆக்சைடும் தான் தேவை. சுற்றுசூழலில் உள்ள கார்பன்டை ஆக்சைடை இழுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியேற்றும். மக்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கும்
இரண்டு 10 வயது மரங்கள் அல்லது 200 சதுர மீட்டர் புல்வெளியை மாற்றுகிறது. அதன் செயல்பாடு மரங்கள் மற்றும் புல் போன்றது, ஆனால் மைக்ரோஅல்காக்கள் மரங்களால் வாழ முடியாத மாசுபட்ட சூழலில் வாழ முடியும். திரவ மரமானது, காடுகளை மாற்றாமல் அல்லது ஏற்கனவே உள்ள மரம் நடும் திட்டங்களை மாற்றாமல் மரங்களை நடுவது சாத்தியமில்லாத நகர்ப்புற இடங்களை நிரப்பும் நோக்கம் கொண்டது.
செர்பியாவில் நுண்ணுயிரிகளின் பயன்பாட்டை பிரபலப்படுத்துவதையும் விரிவுபடுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது கழிவு நீர் சுத்திகரிப்பு, உரமாக, உயிரி மற்றும் உயிரி எரிபொருட்களை உற்பத்தி செய்வதற்கும், காற்று சுத்திகரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு திரவ மரம், இரு நிஜ மரங்களுக்கு சமமாம். மரங்களை வைக்க முடியாத பகுதிகளில் எல்லாம் இவற்றை வைக்கமுடியும் என்பதால் இவை பரவலானால் நகர்ப்புறங்களின் காற்று மாசுபடுதல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும் விஞ்ஞான உலகம் ஆர்ப்பரித்து வரவேற்கிறது.