வீடு கட்டுறீங்களா..? இதையெல்லாம் தெரிஞ்சிக்கணும்..! இன்ஜினியர் சொல்றாங்க..!

வீடு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளீர்களா..? அப்படி என்றால் இரண்டு அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கூறுவதை கவனத்தில் கொள்ளுங்கள்.;

Update: 2024-08-19 08:17 GMT

house construction in tamil-புதிய வீடு (கோப்பு படம்)

House Construction in Tamil, House Construction Ideas, Housing Loan

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்தவீடு கட்டணும்கிறது லட்சியமாகவே இருக்கும். அதுவும் தற்போது பல தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. அதனால் எல்லா வசதிகளுடனும் சூப்பரா ஒரு வீட்டைக் கட்டணும் என்பது பலரது எண்ணம்.

இப்போது வேலையில் இருப்பவர்களுக்கு பல தனியார் வங்கிகளும் தாராளமாக கடன் கொடுக்கிறார்கள். அதனால் வீடு கட்டுவதும் எளிதான காரியமாக உள்ளது. பல கட்டுமான நிறுவனங்கள் நாம் எப்படி கேட்கிறோமோ அப்படியே கட்டிக்கொடுப்பதற்கும் தயாராக இருக்கின்றனர்.

House Construction in Tamil,

வாஸ்து பார்த்து வீடு கட்டணுமா..? அதற்கேற்ப பொறியாளர்கள் வரைபடங்களைத் தயாரித்து வீடு கட்டிக்கொடுக்கின்றனர். இப்படி பல விஷயங்களை நுணுக்கமாக செய்து கொடுக்கிறார்கள்.

ஒரு வீடு கட்டுவதற்கு என்னெவெல்லாம் தெரியணும்? பொறியாளர் என்ன சொல்கிறார்னு பாருங்க :

நாம் வாங்கியிருக்கும் வீட்டு மனை முழுவதும் வீடு கட்ட பொதுவாக அனுமதி கிடைப்பதில்லை. உதாரணமாக 1,200 சதுர அடி மனை வாங்கி இருந்தோம் என்றால், அதில் முழுவதுமாக வீடு கட்ட முடியாது. நிலத்தைச் சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். எவ்வளவு இடம் விட வேண்டும் என்பது நிலம் எந்த வரையறைக்கு உட்பட்டது என்பதைப் பொறுத்து மாறுபடும்.

House Construction in Tamil,

அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒரு அளவு, நகராட்சிப் பகுதி என்றால் ஒரு அளவு எனத் தனித் தனி வரைமுறைகள் உள்ளன. மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 50 அடியோ அதற்கும் குறைவாகவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும்.

அதே போல வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும். வாகனங்கள் நிறுத்தும் வசதிக்காகவும் காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த வரைமுறைகள். மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (floor space index) என்று சொல்வார்கள்.

House Construction in Tamil,

இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடம் கட்ட முடியும். வீடு கட்டும் அளவு முடிவான பிறகு வீட்டுக்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அந்த வீட்டுக் கட்டுமானத் திட்டத்துக்குச் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்பில் அனுமதி வாங்கும் முன்பு அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானில் கையெழுத்து வாங்க வேண்டும்.

அதாவது அந்த பிளானை அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர் அங்கீகரிக்க வேண்டும். பின்னர் அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். வீட்டில் மழை நீர் சேமிப்புக்கான வசதி பிளானில் இருக்க வேண்டும். அது அனுமதி வாங்கும்போது பரிசோதிக்கப்படும்.

இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அனுமதி வர ஒரு மாத காலம்வரை ஆகக்கூடும். வீட்டுக் கட்டுமானத் திட்டம் வரத் தாமதமாகிறது என நினைத்து அதற்கு முன்பே கட்டுமானப் பணிகளைத் தொடங்கக் கூடாது. பிளானில் காட்டியுள்ளபடி வீடு கட்டப்பட வேண்டும். இல்லையெனில் பின்னால் அதிகாரிகள் ஆய்வுசெய்யும்போது பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

House Construction in Tamil,

இது போன்ற விதிமுறைகள் அவசியம் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் வீடுகட்டுவதற்கு முயற்சி எடுக்கவேண்டும்.

-கட்டுமான பொறியாளர் தங்கமுத்து

......................................

மொட்டை மாடில என்னவெல்லாம் வைக்கணும்?

இன்னிக்கு, ஒரு வீடு காட்டியதும் மொட்டைமாடில என்னென்ன விஷயங்களை கவனிக்கணும் என்று அனுபவம் மிக்க பொறியாளர் அருண்குமார் சொல்றதை கவனிங்க.

நாம வீடு கட்டும் போது வீட்டோட மொட்டை மாடில கைப்பிடி சுவர் (Parapet Wall) கட்டுவோம். அந்த கைப்பிடி சுவர்ல என்னென்ன விஷயங்கள் கவனிக்கணும் அப்படிங்கிறத இந்த பதிவுல பார்க்கலாம்.

முதல்ல கைப்பிடி சுவரோட உயரம் 3 அடிக்கு குறையாம இருக்கனும். சின்ன பசங்க இருக்குற வீட்டுல இந்த மாதிரி இருந்தா நல்லது. நமக்கு நல்ல ஒரு பாதுகாப்பாவும் இருக்கும்.

House Construction in Tamil,

அப்புறம் இந்த கைப்பிடி சுவரோட டாப்ல 2" கனத்துக்கு சில் கான்கிரீட் கொடுக்கனும். ஏனா இந்த கைப்பிடி சுவர் வந்து வெயிலையும் மழைலையும இருக்குறதால கிராக் வரும். அந்த கிராக்க தவிர்க்க சில் கான்கிரீட் கண்டிப்பாக கொடுக்கணும். ஒரு சில இடங்களில கிரானைட் போடுவதும் உண்டு.

அப்புறம் இந்த கைப்பிடி சுவர் டாப்ல பூசும் பொழுது அல்லது கிரானைட் பதிக்கும் போது உள் பக்கமா வாட்டம் வச்சுக்கனும். அதுல விழுற மழைத் தண்ணீர் சுவர்ல வழியாம வீட்டோட மொட்டை மாடிக்குள்ள விழும். ஒருவேளை வெளிப்பக்கமா சுவர்ல மழை தண்ணீர் வழிஞ்சதுனா பாசி பிடிச்சு அசிங்கமா இருக்கும்.

இந்த கைப்பிடி சுவர் கட்டும்போதே பந்தல் வளையம் வச்சுகிட்டா நாம வீட்டுல ஏதாவது விசேஷ டைம்ல பந்தல் கால் வைக்கிறதுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம் பாத்திங்கனா இந்த கைப்பிடி சுவர் 4 அங்குல சுவரா இல்லாம 9 அங்குல சுவரா இருக்குற மாதிரி பண்ணுங்க. ஏனா ரொம்ப உறுதியா இருக்கும். அடுத்த மாடி எடுக்கும் போது இதுலயே தொடர்ந்து எடுத்து போகலாம். கைப்பிடி சுவர் கட்டும்போது இந்த பாய்ண்ட்லாம் ஞாபகத்தில வச்சுக்கோங்க.

-Er.அருண்குமார்B.E.

கட்டுமான பொறியாளர்

Tags:    

Similar News