ஆர்க்டிக் பனி உருகலை தடுக்கும் ராட்சஷ வைரஸ்கள்..! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

ஆர்க்டிக்கில் பனி உருகும் பாசிகளை உண்ணும் ராட்சத வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இது பனி உருகுவதை தடுக்கும் இயற்கையின் தூதுவர்.

Update: 2024-06-06 16:58 GMT

Giant Viruses that Eat Ice-Melting Algae in the Arctic ,Arctic Ice Melting Due to Global Warming, Aarhus University,Scientists

புவி வெப்பமடைதல் காரணமாக பனி உருகுவதை மெதுவாக்கும் புதிய வைரஸ்களை ஆர்க்டிக் பனியின் மேற்பரப்பில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையைச் சேர்ந்த லாரா பெரினி மற்றும் அவரது குழுவினர், இந்த ராட்சத வைரஸ்கள் பனிக்கட்டிகளில் உள்ள பாசிகளை உண்பதை கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளனர்.

Giant Viruses that Eat Ice-Melting Algae in the Arctic

இந்த பாசிப் பூக்கள் பெரும்பாலும் வேகமாக பனி உருகுவதற்கு வழிவகுக்கும். இதனால் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் விளைவை அதிகரிக்கிறது. ஆல்காவுடன் இணைந்து வாழும் வைரஸ்கள், பாசி பரவலைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, இயற்கையான கட்டுப்பாட்டு பொறிமுறையாக செயல்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

"வைரஸ்கள் குறித்து நாங்கள்  அதிகமாக அறியாமல் உள்ளோம். ஆனால் பாசிப் பூக்கள் பனி உருகுவதைத் தடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். ஏனெனில் ஆய்வில் அதற்கான தடயங்களை எங்களால் கண்டறிய முடிந்தது. ஆனால்  அவை எவ்வளவு குறிப்பிடும்படியாக செயல்படும் மற்றும் எவ்வளவு திறமையானவை என்பது எங்களுக்கு இன்னும் ஆய்வில் தெரியவரவில்லை. அவற்றை மேலும் ஆராய்ந்து, அந்த சில கேள்விகளுக்கு பதிலளிப்போம் என்று நம்புகிறோம்" என்று லாரா பெரினி கூறினார்.

ஆர்க்டிக்கின் பனிக்கட்டிகளில் இதுபோன்ற பாசி உண்ணும் வைரஸ்கள் இருப்பது இதுவே முதல் முறை என்று அவர் விளக்குகிறார்.

Giant Viruses that Eat Ice-Melting Algae in the Arctic

"அடர் பனி, சிவப்பு பனி மற்றும் உருகும் துளைகள் (கிரையோகோனைட்) ஆகியவற்றின் மாதிரிகளை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். இருண்ட பனி மற்றும் சிவப்பு பனி இரண்டிலும் செயலில் உள்ள ராட்சத வைரஸ்களின் அடையாளங்களை நாங்கள் கண்டறிந்தோம். மேலும் அவை மேற்பரப்பு பனி மற்றும் பனியில் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை. ஏராளமான நிறமி நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது," என்று அவர் ஸ்பேஸ் டெய்லி மேற்கோள் காட்டினார்.

பெரிய அளவில் இருந்தாலும், இந்த வைரஸ்களை சாதாரணக் கண்களால் பார்க்க முடியாது. பனிக்கட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் உள்ள டிஎன்ஏவை ஆய்வு செய்த பின்னரே விஞ்ஞானிகள் அவற்றைப் பற்றி அறிந்தனர்.

"மாதிரிகளில் இருந்து வரிசைப்படுத்தப்பட்ட மொத்த எம்ஆர்என்ஏவில், மொத்த டிஎன்ஏவில் உள்ள அதே குறிப்பான்களை நாங்கள் கண்டறிந்தோம். எனவே அவை படியெடுக்கப்பட்டவை என்பதை நாங்கள் அறிவோம். வைரஸ்கள் பனியில் வாழ்னது வருகின்றன. மேலும் அவைகள் செயலில் உள்ளன," என்று அவர் கூறினார்.

Giant Viruses that Eat Ice-Melting Algae in the Arctic

ராட்சத வைரஸ்கள் இன்னும் மர்மமான உயிரினங்களாக இருக்கின்றன. அவை சமீபத்தில் பனிக்கட்டி கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளின் வைரல் உறவினரிடமிருந்து அவைகளை வேறுபடுத்துவது அவைகளின் பரபரப்பான செயல்பாடு ஆகும். அவை டிஎன்ஏ பழுதுபார்ப்பு, பிரதியெடுத்தல், டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற பணிகளைச் செய்ய உதவும் பல செயலில் உள்ள மரபணுக்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த நுண்ணுயிரிகள் பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளை அறிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவை.

நமது கருத்து

இந்த ஆராய்ச்சி முடிவுகளில் இருந்து ஒரு உண்மை நமக்குத் தெரிய வருகிறது. அதாவது, இயற்கைக்கு ஒரு ஆபத்து வருகிறதென்றால் அது தன்னை காப்பாற்றிக்கொள்ள தேவையான முன் நடவடிக்கைளை எடுக்கும். ஆகவே ஆர்க்டிக் பிரதேசங்களில் பனி உருகுவதைத் தடுக்க இயற்கைஅனுப்பிய தூதுவர்கள் இந்த ராட்ஷச வைரஸ்களாக இருக்கலாம்.

Giant Viruses that Eat Ice-Melting Algae in the Arctic

உதாரணத்துக்கு நமது கண்ணில் தூசிவிழுந்தால் இயற்கை சும்மா இருப்பதில்லை. உடனே கண்ணீர் வடிவில் ஒரு தூதுவனை அனுப்பி கண்ணில் உள்ள தூசியை வெளியே தள்ளுவதற்கு தேவையான நடவடிக்கைளில் இறங்குகிறது. அது இயற்கை செய்துள்ள பாதுகாப்பு அமைப்பு.

அதைப்போலவே பனி உருகுவதைத் தடுத்து பூமியைக் காப்பாற்ற தூதுவர்கள் வடிவில் வந்துள்ளவர்கள்தான் இந்த ராட்ஷச வைரஸ்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

Tags:    

Similar News