காதுகேளாத குழந்தை இருக்குதா..? கவலைப்படாதீங்க..! விரைவில் நல்லசேதி வரும்..!
பிறவியிலேயே காது கேளாத ஐந்து குழந்தைகளுக்கு மரபணு சிகிச்சை சோதனை மேற்கொண்டதில் அவர்கள் இரு காதுகளிலும் கேட்கும் திறனை மீண்டும் பெற்றுள்ளனர்.
Deaf Kids Get Back Their Hearing in Tamil,Deaf by Birth,Gene Therapy Trial, Fudan University,Genetic Mutations
பிறவியிலேயே காதுகேளாத குழந்தைகளுக்கு மரபணு சிகிச்சை சோதனை அடிப்படையில் அளிக்கப்பட்டது. அதில் 5 குழந்தைகளும் கேட்கும் திறனை பெற்றுள்ளதாக மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷாங்காயில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழக மருத்துவர்களால் செவிவழி சமிக்ஞை பரிமாற்றத்திற்கான முக்கிய புரதத்தின் உற்பத்தியைத் தடுக்கும் மரபணு மாற்றங்களால் பாதிக்கப்பட்ட ஒன்று முதல் 11 வயது வரையிலான குழந்தைகளை இலக்காகக்கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.
Deaf Kids Get Back Their Hearing in Tamil
இந்த சிகிச்சையால் இப்போது குழந்தைகளுக்கு ஒலியின் திசைகளைக் கண்டறிய உதவுகிறது. பாதிக்கப்பட்ட இந்த இளம் நோயாளிகள் சில வாரங்களுக்குப் பிறகுதான் நேர்மறையான முடிவுகளைக் காட்டத் தொடங்கினர். அந்த முன்னற்றங்களில் ஒலிகளைக் கண்டறிதல், சத்தமில்லாத சூழலில் கூட பேச்சை கேட்கும் திறன் பெற்றிருப்பது மற்றும் இசையை ரசிப்பது ஆகியவை அடங்கும்.
மாசசூசெட்ஸ்-ஐச் சேர்ந்த கண் மற்றும் காது டாக்டர். ஜெங்-யீ சென் இந்த சோதனையின் முடிவுகளை ஒரு "திருப்புமுனை" என்று விவரித்தார். மேலும் குழந்தைகளின் செவித்திறன் "வியத்தகு முறையில்" மேம்படுவதை இது எடுத்துக்காட்டுகிறது.
"இது மரபணு சிகிச்சையின் முடிவுகள் முற்றிலும் ஒரு திருப்புமுனையாகும்," என்று சென் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
Deaf Kids Get Back Their Hearing in Tamil
ஒரு நேர்மறையான முன்னேற்றம் கிடைத்ததால் அதன் வளர்ச்சியில், அந்த நிறுவனங்கள் இப்போது மருத்துவ பரிசோதனைகளை மேலும் நடத்தி வருகின்றன. இதனால் அவர்கள் முழுமையான சிகிச்சை முடிவுகளைப் பெற முடியும் என்றும் அவர் பரிந்துரைத்தார். "இந்த முடிவுகள் ஏதேனும் சிக்கல்கள் இல்லாமல் இருந்தால், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், இது மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சிகிச்சையானது, செயலற்ற வைரஸைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட மரபணுவான ஓட்டோஃப், உள் காதில் வேலை செய்யும் நகல்களை அறிமுகப்படுத்துகிறது. இது காது செல்கள் செவிக்கு இன்றியமையாத ஓடோஃபெர்லின் என்ற புரதத்தை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது.
Deaf Kids Get Back Their Hearing in Tamil
நேர்மறை முன்னேற்றங்கள்
இரண்டு வயது சிறுவன் தனது பெயருக்கு மூன்று வாரங்களுக்குள் பதிலளித்து 13 வாரங்களுக்குப் பிறகு இசைக்கு நடனமாடினான். ஒரு மூன்று வயது சிறுமி, ஆரம்பத்தில் ஒலிகளுக்கு எதிர்வினையாற்றவில்லை. ஆனால், 13 வாரங்களுக்குப் பிறகு வாக்கியங்களைப் புரிந்துகொண்டு சில வார்த்தைகளைப் பேசினார்.
சாங் யீ என்ற ஒரு தாய் தனது மகனை கூப்பிட்டபோது அதற்கு மகன் பதிலளித்ததால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறினார். "நான் ஒரு அலமாரியில் ஒளிந்துகொண்டு எனது மகனை அழைத்தேன். மகன் அதற்கு பதிலளித்தார்!" என்று அவர் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
"இது உண்மையில் நம் மூளைக்கு ஒரு பிளாஸ்டிசிட்டி (நெகிழ்வுத்தன்மை) இருப்பதைக் காட்டுகிறது. அது நாம் முதலில் நினைத்ததை விட நீண்ட காலம் நீடிக்கும்" என்று சென் கூறினார்.
Deaf Kids Get Back Their Hearing in Tamil
சிகிச்சையின் முழுமையான பின்விளைவுகளை சரிபார்க்க குழந்தைகள் நீண்ட காலம் கண்காணிக்கப்படுவார்கள் என்பதால் அதுகுறித்த சோதனை மேலும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில், 430 மில்லியன் மக்கள் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 26 மில்லியன் பேர் பிறப்பிலிருந்தே காது கேளாதவர்களாக உள்ளனர்.
இப்போது நடந்துள்ள மரபணு சிகிச்சை முறை முழுமையான சோதனைக்குப்பிறகு வெற்றியடைந்தால் பிறவியிலேயே காது கேளாமல் இருக்கும் குழந்தைகள் பெருமளவில் நன்மை அடைவார்கள்.
ஜூன் 5ம் தேதி நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒரு மைல்கல் ஆகும். ஏனெனில் இது இரண்டு காதுகளிலும் இதுபோன்ற சிகிச்சைக்கான ஒரு செயல்முறையை உள்ளடக்கி இருப்பதால் இது செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும்.