'அம்பு' போர்க்களத்தின் முதன்மையான ஆயுதம்..! இப்போ..?

Ambu Meaning in Tamil-அம்பு என்பது என்ன? அது எப்படி செயல்படுகிறது? என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

Update: 2023-05-11 06:53 GMT

ambu meaning in tamil-அம்பு விளக்கம்.(கோப்பு படம்) நன்றி: விக்கிப்பீடியா 

Ambu Meaning in Tamil-'எய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்..?' என்பது தமிழ் மொழியில் உள்ள ஒரு பழமொழி. அம்பு பற்றி பேசப்படும் முன் வில் எனபதை தெரிந்துகொண்டு அம்பு பற்றி தெரிந்துகொள்ளலாம்.


'வில்' என்பது வளைவான வடிவமுடைய, காற்றில் இயக்கம் பெறும் ஒரு எறிகணை ஆகும். இது அம்பு எய்ய உதவும் ஒரு சாதனம் ஆகும். வில்லின் இருமுனைகளின் இணைப்பை நாண் என்று கூறுவோம். நாண் மீது அம்பை வைத்து பின்னிழுக்கும் போது வில்லின் முனைகள் வளைக்கப்படும். நாணை விடுவிக்கையில், வளைக்கப்பட்டிருக்கும் வில்லின் நிலையாற்றல், அம்பின் திசைவேகமாக மாறும். நாண் விடப்பட்டதும் வில்லிலிருந்து அம்பு காற்றில் பறந்து சென்று இலக்கைத் தாக்கும். அம்பு எய்யும் கலையை அல்லது விளையாட்டை, வில்வித்தை என்கிறோம்.

இன்று, வில்லும் அம்பும் பிரதானமாக காடுகளில் வேட்டையாடுதலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல வில்வித்தை விளையாட்டாகவும் சர்வதேச அரங்கில் நடந்துவருகிறது.

மனித வரலாற்றில் கற்களால் செய்யப்பட ஆயுதங்களுக்குப் பின்னர் மனிதன் கண்டுபிடித்த அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்பு இதுவாகத்தான் இருக்கும். அறிவியல் அறியாத காலத்தில் இயக்கம் பெறும் ஆற்றலை அறிந்து உருவாக்கப்பட்டது.


வில்லுப்பாட்டு

மேலும் இது கலை வடிவமாகவும் வளர்ந்துள்ளது. வில்லை கிடையாக வைத்து நாணில் சலங்கை மணிகளை கட்டி, ஒரு கோல் கொண்டு நாண் மீது தட்டி இசையாக்குவது வில்லுப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது.

இதிகாசங்களில் வில்

வில் போர்க்களத்தில் ஒரு முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு கலையாக விளங்கியது. இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களிலும் நடைபெற்ற போர்களில் வில் தான் சண்டை செய்வதில் முதன்மையான ஆயுதமாக இருந்திருக்கிறது. வில்வித்தையில் சிறந்த வீரர்களை “வில்லாளிகள்” என்று போற்றுவது வழக்கமாக இருந்தது. வில்வித்தைக்கு அஸ்திரப் பயிற்சி என்றும் பெயர் உண்டு.


விதுரர் வில்லை ஒடித்த வரலாறு

விதுரர் வைத்திருந்த வில் விஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராகவும் வெல்ல முடியாது. அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆணானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது. இதனை அறிந்திருந்த கண்ணபிரான், தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். இதுவும் பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது.

இப்படி வில் குறித்து பேசும்போது வெறும் வில் மட்டுமே போர்க்களத்தில் ஒன்றும் செய்திவிடமுடியாது. வில்லை இயக்கம்பெறவைக்கும் சாதனம் அம்பு தான். அம்பு இல்லாமல் வில்மட்டும் இயக்கம்பெற முடியாது.

நமது புராண இதிகாசங்களில் வில் பயன்பாடு குறித்த ஏராளமான செய்திகளை நாம் படித்திருக்கிறோம்.அதனால் தானோ என்னவோ இந்திய வீர, வீராங்கனைகள் வில்வித்தை போட்டிகளில் பல சாதனை படைத்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News