மாஸ்க் போடலயா? காட்டுங்க அபராதம்
சிவகங்கையில் காரோண விழிப்புணர்வுக்காக மாஸ்க் போடாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மாஸ்க் விழிப்புணர்வு சோதனை 4வது நாளாக நடைபெற்றது.
சிவகங்கை நகர பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மாஸ்க் அணியாதவர்களுக்கு சிவகங்கை கலெக்டர் மதுசூதன ரெட்டி அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி ஆணையாளர் ஐயப்பன் தலைமையில் குழு ஒன்று அமைத்து அனைத்து கடைகள் மற்றும் வெளியே வரும் போது மாஸ்க் அணியாதவர்களிடம் கொரோனா வின் தாக்கத்தைப் பற்றியும் அதிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் விளக்கங்களை கூறியும் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்தும் தொடர்ந்து 4 நாட்களாக சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு 16 ,800 ரூபாயும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு 2,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளது.